நல்ல சான்ஸை மிஸ் பண்ணிட்டாரே... சஞ்சு சாம்சன் செய்த தவறு! போட்டியின் நடுவே மைதானத்தில் கோபமடைந்த ரோகித் சர்மா!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதரம்சாலா" போட்டியின் போது ரோகித் ஷர்மா சஞ்சு சாம்சன் மீது கோபப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இருந்த இந்திய அணி தர்மசாலாவில் நேற்று நடந்த 3-வது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வென்றது.
முன்னதாக, இலங்கை இறுதி ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்யத் தேர்ந்தெடுத்தது, முந்தைய போட்டியைப் போலவே அவேஷ் கான் மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் புதிய பந்துவீச்சினால் இலங்கை அணி ஆட்டம் கண்டது.
20 ஓவரில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பாக ஆவேஷ் கான் 2 விக்கெட்டுகளையும், சிராஜ், ஹர்ஷல் படேல் மற்றும் ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.
அடுத்து 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சனும், கேப்டன் ரோகித் சர்மாவும் களமிறங்கினர். இந்த தொடரில் வழக்கம் போல் சொதப்பிய ரோகித் சர்மா 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்ரேயஸ் ஐயர் களமிறங்கி கடைசி வரை ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் குவித்து அணி வெற்றி பெற உதவினார்.
சஞ்சு சாம்சன்(18), தீபக் ஹூடா(21) வெங்கடேஷ் ஐயர் (5) ஆகியோர் குறைந்த ரன்களில் வெளியேறினாலும், ரவீந்திர ஜடேஜா 22 ரன்களுடன் களத்தில் இருந்தார். இறுதியில் இந்திய அணி 16.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு இலக்கை கடந்து வெற்றிபெற்றது.
இந்த தரம்ஷாலாவில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டியில் இந்திய கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் ஒருமுறை கோபப்பட்டார். இலங்கை இன்னிங்ஸின் 16வது ஓவரில் அந்த சம்பவம் நடந்தது.
ஹர்ஷல் பட்டேல் அந்த ஓவரில் பவுன்சரை வீசிய போது சாமிக்க கருணாரத்னா ஸ்டைரைக்கில் இருந்தார். 131 கிமீ வேகத்தில் வீசப்பட்ட அந்த பம்பர் பவுன்சர் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் நினைத்ததை விட வேகமாக வந்தது. இதன் விளைவாக, அது அவரது கையுறைகள் வழியாக நழுவி பந்து பவுண்ட்ரி எல்லைக்கு ஓடியது. சாம்சனை கோபமாக வெறித்துப் பார்த்த ரோஹித், சஞ்சு சாம்சன் மீது கோபமடைந்தார்.
ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸை வழிநடத்தும் போது ரோகித் கோபப்படுவதை அரிதாகவே காணமுடியும். 34 வயதான ரோகித் இந்திய அணிக்கு கேப்டனாக செயல்படும் போது மிகவும் ஆக்ரோஷமாக செயல்படுகிறார்.