'இன்னொரு ஐபிஎல் டீம்-ஆ?'.. 'இவங்களுக்குத் தான் கொடுக்கணும்!'.. வலுக்கும் சிபாரிசுகள்!.. அவசர அவசரமாக வேலை செய்யும் கங்குலி!.. கடும் போட்டி... யாருக்கு ஜாக்பாட்?
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2020 ஐபிஎல் தொடர் முடிந்த உடனேயே பிசிசிஐ அதிரடி திட்டங்களை கையில் எடுத்துள்ளது. 2021 ஐபிஎல் தொடருக்கு பிசிசிஐ பிரம்மாண்ட திட்டத்துடன் தயாராகி வருகிறது.

ஒன்பது ஐபிஎல் அணிகளுடன் அடுத்த சீசனில் களமிறங்க உள்ளது பிசிசிஐ. அதன் மூலம் தொடரை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளது.
குஜராத் தலைநகர் அஹமதாபாத்தை மையமாக வைத்து புதிய ஐபிஎல் அணியை கங்குலி அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மற்ற நகரங்களை விட்டு அஹமதாபாத்தை தேர்வு செய்ததன் காரணம் என்ன என பல்வேறு பின்னணித் தகவல்கள் வலம் வருகின்றன.
இந்த ஒன்பதாவது ஐபிஎல் அணி குறித்து 2020 ஐபிஎல் தொடருக்கு முன்பே பேசப்பட்டது.
2021 ஐபிஎல் தொடரில் ஒன்பது அணிகளை களமிறக்க கங்குலி மற்றும் பிற பிசிசிஐ அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக கூறப்பட்டது. தற்போது 2020 ஐபிஎல் தொடர் வெற்றிகரமாக முடிந்ததை அடுத்து கங்குலி அதற்கான முயற்சியில் இறங்கி உள்ளார்.
தீபாவளி முடிந்த உடன் பிசிசிஐ அதிகாரிகள் மத்தியில் விவாதம் நடத்தி புதிய அணிக்கான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. விண்ணப்பம் கோரப்பட்டு புதிய அணியின் உரிமையாளர்களை தேர்வு செய்யும் பணி டிசம்பர் மாதம் நடைபெறும் என கூறப்படுகிறது.
2020 ஐபிஎல் தொடரில் பிசிசிஐக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடுகட்டவே இந்த முயற்சி என கூறப்படுகிறது. புதிய அணி மூலம் கூடுதல் வருமானம் கிடைக்கும் என பிசிசிஐ நம்புகிறது.
இது குறித்து, மற்ற ஐபிஎல் அணிகளுக்கு ஏற்கனவே தெரியும் எனவும் கூறப்படுகிறது. அந்த ஒன்பதாவது அணி அஹமதாபாத்தை சேர்ந்த அணி தான் என பிசிசிஐ வட்டாரத்தில் கூறப்படுகிறது. அது ஏன் குஜராத் தலைநகர் அஹமதாபாத்? அதற்கு இரண்டு காரணம் சொல்லப்படுகிறது.
ஒன்று ஜெய் ஷா. இன்னொன்று அஹமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் கிரிக்கெட் மைதானம். தற்போதைய பிசிசிஐ அமைப்பின் செயலாளர் பதவியில் இருப்பவர் மத்திய அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய் ஷா.
மேலும், குஜராத் மாநில கிரிக்கெட் அமைப்பின் தலைவராக அமித் ஷா இருக்கிறார்.
இந்த நிலையில், அந்த மாநிலத்துக்கு புதிய ஐபிஎல் அணி வர அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமான அஹமதாபாத் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைத்தனர் டொனால்ட் டிரம்ப் - மோடி. அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக அங்கே இதுவரை எந்த போட்டியும் நடைபெறவில்லை.
அந்த மைதானத்தில் அதிக போட்டிகள் நடத்தும் வகையில் அந்த நகரத்துக்கு என ஒரு ஐபிஎல் அணியை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாகவும் ஒரு பேச்சு உள்ளது. அந்த பெரிய மைதானம் அங்கே உருவாகவும் அரசியல் செல்வாக்கே காரணம் என்பதால் அஹமதாபாத்தில் தான் புதிய ஐபிஎல் அணி செயல்படும் என கூறுகிறார்கள்.
குஜராத் மாநிலத்துக்கு புதிய ஐபிஎல் அணி வருகிறது என்பதால் அந்த அணியை அந்த மாநிலத்தின் பெரிய நிறுவனமான அதானி குழுமம் வாங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோகன் லால், சல்மான் கான் உள்ளிட்ட நடிகர்களும் அந்த ஐபிஎல் அணியை வாங்க ஆர்வமாக இருக்கிறார்கள்.

மற்ற செய்திகள்
