ஐபிஎல்2020: “நிக்கோலஸ் பூரன் எறிந்த பந்து”.. ‘சுருண்டு விழுந்த வீரர்!’.. ‘மைதானத்தை உறையவைத்த திக்திக் நிமிடங்கள்!’
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் விஜய் ஷங்கர் மீது பந்து பலமாக தாக்கியதால் அவர் சுருண்டு விழுந்தார்.

இதனை அடுத்து அவருக்கு முதலுதவி செய்ய உடனடியாக பிஸியோதெரபிஸ்ட் ஓடி வந்த சம்பவம் பரபரப்பாகியது. 2020 ஐபிஎல் தொடரின் 43 வது லீக் போட்டியில், பஞ்சாப் அணிக்கு எதிராக டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மந்தமான ஆடுகளம் என்பதால் இரு அணிகளு நிதானமாக ஆட, முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் எடுத்தது. முதலில் இது குறைவான ஸ்கோர் என விமர்சிக்கப்பட்டது. ஆனாலும், வெற்றி பெற முடியும் என்கிற நம்பிக்கையுடன் பந்து வீசியது பஞ்சாப் அணி.
அடுத்து ஆடிய ஹைதராபாத் அணியின் வார்னர் 35 மற்றும் பேர்ஸ்டோ 19 ரன்கள் எடுத்தனர். அடுத்து வரிசையாக விக்கெட்கள் சரியத் தொடங்கின. அப்போதுதான் களமிறங்கிய ஹைதராபாத் அணி வீரர் விஜய் ஷங்கர், தம் அணியை காப்பாற்ற பொறுப்பாக ஆடினார். 20 ரன்களை கடந்து இலக்கை நெருங்கி ஆடியபோது, அர்ஷ்தீப் சிங் வீசிய 18வது ஓவரின் 5வது பந்தை பாயின்ட் திசையில் அடித்து விட்டு ஒரு ரன் ஓடினார் விஜய் ஷங்கர்.
அப்போது பந்தை தடுத்த நிக்கோலஸ் பூரன் நேராக நான்- ஸ்ட்ரைக்கர் திசையை நோக்கி எறிய, அப்போது பந்து ரன் எடுக்க, ஹெல்மட் அணியாமல் ஓடிவந்த விஜய் ஷங்கரின் இடது பக்க தலையில் பலமாக தாக்கியது. அவர் அப்படியே கீழே சுருண்டு விழுந்தார். அனைவரும் பதற்றம் அடைந்தனர். உடனடியாக பிஸியோதெரபிஸ்ட் ஓடி வந்தார். அதன் பின் லியில் இருந்து மீண்ட விஜய் ஷங்கர் திரும்பவும் பேட்டிங் செய்தார்.
ஆனால், அடுத்த பந்திலேயே விஜய் ஷங்கர் ஆட்டமிழந்தார். அதன் பின் ஹைதராபாத் அணி அடுத்தடுத்து விக்கெட்களை 2 ஓவர்களில் இழந்து,127 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் 114 ரன்களுக்கு ஆல் - அவுட் ஆனது. 12 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வென்றது.

மற்ற செய்திகள்
