கோலி, ரோகித் போட்ட சைலண்ட் பார்ட்னர்ஷிப்!.. அசைக்க முடியாத வலுவோடு இந்திய அணி!.. ஐசிசி வெளியிட்ட மாஸ் தகவல்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன் தரவரிசை பட்டியலில் இந்தியா தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில், ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிட்டது. இதில், பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், பாபர் அசம் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் 865 ரேட்டிங்குடன் முதலிடத்தில் நீடிக்க, அடுத்த இரண்டு இடங்களையும் இந்திய வீரர்களே ஆக்கிரமித்துள்ளனர்.
ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், இரண்டாம் இடத்தில் இந்திய கேப்டன் விராட் கோலி அப்படியே உள்ளார். அவரது ரேட்டிங் 857. முதலிடத்தில் இருக்கும், பாபருக்கும் இவருக்குமான ரேட்டிங் வித்தியாசம் 8 மட்டுமே.
மூன்றாம் இடத்தில், இந்திய துணை கேப்டன் ரோஹித் ஷர்மா நீடிக்கிறார். அவரது ரேட்டிங் 825. கடந்த 2019ம் ஆண்டு 885 புள்ளிகள் வரை முன்னேறிய ரோஹித், ரேட்டிங்கில் சரிந்து இப்போது 825ல் இருக்கிறார். எனினும், தனது மூன்றாவது இடத்தை இழக்காமல் நீடிக்கிறார்.
நான்காம் இடத்தில் நியூசிலாந்தின் ராஸ் டெய்லர் உள்ளார். அவரது ரேட்டிங் 801. ஐந்தாம் இடத்தில், ஆஸ்திரேலிய லிமிட்டார் ஓவர்ஸ் கிரிக்கெட் கேப்டன் ஆரோன் ஃபின்ச் இருக்கிறார். ரேட்டிங் 791. ஆறாவது இடத்தில் இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜானி பேர்ஸ்டோ, ஏழாவது இடத்தில் பாகிஸ்தானின் அதிரடி ஓப்பனர் ஃபக்கர் சமான் உள்ளனர். தென்னாப்பிரிக்க கேப்டன் டு பிளசிஸும் அதே புள்ளிகள் பெற்றதால் அவரும் 7வது இடத்தில் இருக்கிறார்.
அதேபோல், டேவிட் வார்னரும் வெஸ்ட் இண்டீசின் ஷாய் ஹோப்பும் ஒரே ரேட்டிங் பெற்றிருப்பதால் 8வது இடம் காலியாக, இருவரும் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளனர். பவுலிங்கை பொறுத்தவரை, நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் முதலிடத்தில் இருக்கிறார். வங்கதேச சுழற் பந்துவீச்சாளர் மெஹதி ஹசன் 2-வது இடத்துக்கு முன்னேறி புதிய சாதனை படைத்துள்ளார். அதேபோல், மற்றொரு வங்கதேச பவுலர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஒன்பதாவது இடம் பிடித்துள்ளார். இந்தியா தரப்பில், ஐஸ்பிரித் பும்ரா ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

மற்ற செய்திகள்
