HARDIK PANDYA : பிரம்மாண்டமாக நடைபெற்ற பாண்ட்யாவின் திருமணம்.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணி வீரரான ஹர்திக் பாண்ட்யாவின் திருமணம் நேற்று பிரம்மாண்ட முறையில் நடைபெற்றிருக்கிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
Images are subject to © copyright to their respective owners.
Also Read | கோலி & ஜடேஜாவின் பதான் டான்ஸ்.. நடிகர் ஷாருக் கானின் கலகல கமெண்ட்.. வைரலாகும் வீடியோ..!
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் ஒருவராக கருதப்படுபவர் ஹர்திக் பாண்ட்யா. பவுலிங் மற்றும் பேட்டிங்கில் அசத்தும் பாண்ட்யா சமீபத்தில் இந்திய டி20 அணிக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார். உலகக் கோப்பை தொடரில் பாண்ட்யாவின் பங்களிப்பு அதிகம் இருக்கும் எனவும் கிரிக்கெட் வட்டாரத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், பாண்ட்யா தனது மனைவியை மீண்டும் திருமணம் செய்திருக்கிறார்.
Images are subject to © copyright to their respective owners.
செர்பியாவை சேர்ந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிக். இவரும் ஹர்திக் பாண்ட்யாவும் நெடுநாட்களாக காதலித்து வந்த நிலையில் துபாயில் வைத்து பாண்ட்யா ப்ரொபோஸ் செய்திருந்தார். இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து, கொரோனா லாக்டவுன் காலத்தில் எளிமையான முறையில் இவர்களது திருமணம் நடைபெற்றது. இதில் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இந்த தம்பதிக்கு அகஸ்தியா எனும் மகன் உள்ளார்.
இந்நிலையில், மீண்டும் பிரம்மாண்ட முறையில் தனது மனைவியை மணந்துள்ளார் பாண்ட்யா. உதய்ப்பூர் உள்ள அரண்மையில் இவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற்றிருக்கிறது. கிறிஸ்துவ முறைப்படி நடைபெற்ற இந்த மண விழாவில் மணப்பெண் நடாஷா ஸ்டான் கோவிக் வெள்ளை நிற உடையணிந்து வர, பாண்ட்யா கருப்பு நிற சூட் அணிந்திருந்தார். அப்போது, அவர் நடனமாடும் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்த திருமணத்தில் ஹர்திக் பாண்ட்யாவின் சகோதரர் க்ருனால் பாண்ட்யா உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டனர். தனது திருமண புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஹர்திக் பாண்ட்யா, மூன்று வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற திருமணத்தை மீண்டும் நிகழ்த்தி காதலர் தினத்தை கொண்டாடியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யாவின் திருமண புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் நிலையில், பலரும் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர்.
We celebrated Valentine’s Day on this island of love by renewing the vows we took three years ago. We are truly blessed to have our family and friends with us to celebrate our love ❤️ pic.twitter.com/tJAGGqnoN1
— hardik pandya (@hardikpandya7) February 14, 2023
Also Read | பெற்றோர் எதிர்ப்பை மீறி காதலர் தினத்தில் திருநம்பியை கரம்பிடித்த இளம்பெண்!!