"இனியும் மறைக்க விரும்பல".. தன்பாலின ஈர்ப்பு கொண்டவராக தன்னை அறிவித்துக்கொண்ட பிரபல கால்பந்து வீரர்.. வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Madhavan P | Feb 14, 2023 08:36 PM

பிரபல கால்பந்து வீரரான ஜேக்கப் ஜாங்க்டோ தான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர் என அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்களுக்கு மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Czech football player Jakub Jankto comes out as gay

                            Images are subject to © copyright to their respective owners.

Also Read | தஞ்சாவூரு பையன்.. கஜகஸ்தான் பொண்ணு.. தமிழ் முறைப்படி நடந்த திருமணம்..!

செக் குடியரசின் கால்பந்து அணியில் அங்கமாக திகழ்கிறார் ஜேக்கப் ஜாங்க்டோ. இவர் Sparta Prague கிளப்பிற்காகவும் விளையாடி வருகிறார். செக் குடியரசு அணிக்காக 47 முறை விளையாடியுள்ள ஜேக்கப்பிற்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். கடந்த 2021 ஆம் ஆண்டு இந்த தம்பதி விவாகரத்து பெற்றது. இந்நிலையில் ஜாங்க்டோ தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றினை பகிர்ந்துள்ளார். அதில் தான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவர் எனவும் அதனை மறைத்து வைக்க விரும்பவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். மேலும், மற்றவர்களை போல, தன்னுடைய வாழ்க்கையை தனக்கு பிடித்தபடி வாழும் உரிமை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

Czech football player Jakub Jankto comes out as gay

Images are subject to © copyright to their respective owners.

இதுபற்றி அவர் பேசுகையில்,"எல்லோரையும் போல, எனக்கென பலங்கள் இருக்கின்றன. எனக்கும் பலவீனங்கள் உள்ளன. எனக்கு என் குடும்பம் உள்ளது. எனக்கு என் நண்பர்கள் உள்ளனர். எல்லோரையும் போல நானும் என் வாழ்க்கையை அச்சமின்றி, பாரபட்சமின்றி, வன்முறையின்றி, சுதந்திரமாக, அன்புடன் வாழ விரும்புகிறேன். நான் தன்பாலின ஈர்ப்பு கொண்டவன் என்பதை இனி என்னை மறைக்க விரும்பவில்லை." எனக் குறிப்பிட்டுள்ளார்.

Czech football player Jakub Jankto comes out as gay

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இதுபற்றி parta Prague வெளியிட்டுள்ள செய்தியில்."ஜாங்க்டோ சில காலத்திற்கு முன்பு கிளப்பில் தனது பாலியல் சார்பு பற்றி வெளிப்படையாகப் பேசினார். அவை அனைத்தும் அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றியது. அதுபற்றி எங்களுக்கு கருத்துகள் எதுவுமில்லை. கேள்விகள் இல்லை. உங்களுக்கு எங்கள் ஆதரவு உள்ளது. உங்கள் வாழ்க்கையை வாழுங்கள், ஜேக்கப். வேறு எதுவும் முக்கியமில்லை." என குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் ஜேக்கப் தான் ஒரு தன்பாலின ஈர்ப்பு கொண்டவர் என பொதுவெளியில் அறிவித்திருப்பதை கால்பந்து பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

Also Read | கல்யாண கொண்டாட்டம்.. நடனமாடும் போது திடீர்னு சரிஞ்சு விழுந்த நபர்.. துடித்துப்போன உறவினர்கள்.. கலங்க வைக்கும் வீடியோ..!

Tags : #CZECH FOOTBALL PLAYER #JAKUB JANKTO #GAY

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Czech football player Jakub Jankto comes out as gay | Sports News.