உற்சாகத்துல கத்துன மனுஷன், அடுத்த செகண்ட்லயே தலை'ல கை வெச்சுட்டாரே.. ஏமாந்த கவுதம் கம்பீர்.. வைரல் வீடியோ
முகப்பு > செய்திகள் > விளையாட்டு15வது ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில், லக்னோ மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் நேற்று (25.05.2022) மோதி இருந்தது.
இந்த போட்டி கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக சென்ற நிலையில், பெங்களூர் அணி இறுதியில் வெற்றி பெற்று, இரண்டாவது குவாலிஃபயர் போட்டிக்கு முன்னேற்றம் கண்டுள்ளது.
ராஜஸ்தான் அணியும் பெங்களூர் அணியும் நாளை (27.05.2022) மோதவுள்ள நிலையில், இதில் வெற்றி பெறும் அணி, குஜராத் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் விளையாடும்.
இளம் வீரர் அதிரடி
முன்னதாக, லக்னோ மற்றும் பெங்களூர் அணிகள் மோதிய போட்டியில், பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து இருந்தது. டு பிளெஸ்ஸிஸ், கோலி மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் அடுத்தடுத்து அவுட்டாக, பெங்களூர் அணி சற்று தடுமாற்றம் கண்டது. ஆனால், மறுபக்கம் தனியாளாக நிலைத்து நின்று ஆடிய இளம் வீரர் ராஜத் படிதர், 54 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து பட்டையைக் கிளப்பி இருந்தார். இதனால், பெங்களூர் அணி 207 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய லக்னோ அணி, 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று, அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளது. லக்னோ அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்த போதும், அவர்கள் செய்த சில தவறு அவர்களுக்கே பாதகமாக அமைந்து விட்டது.
தவற விட்ட வாய்ப்பு
குறிப்பாக, ராஜத் படிதர் மற்றும் தினேஷ் கார்த்திக் உள்ளிட்ட வீரர்களின் எளிய கேட்ச் வாய்ப்புகளை லக்னோ அணி தவற விட்டது. இதுவே பெங்களூர் அணி ரன் குவிக்க, ஒரு திருப்புமுனையாக அமைந்து விட்டது. இந்நிலையில், பெங்களூர் அணி பேட்டிங் செய்த போது, கம்பீர் கொடுத்த ரியாக்ஷன் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.
கம்பீர் ஏமாற்றம்
ராஜத் படிதருடன் கடைசி வரை நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்த தினேஷ் கார்த்திக், 37 ரன்கள் எடுத்திருந்தார். முன்னதாக, அவர் 6 பந்தில் 2 ரன்கள் எடுத்திருந்த போது, ராகுல் கையில் ஒரு நல்ல ஒரு கேட்ச் வாய்ப்பு சென்றது. டைவ் அடித்து கேட்ச் எடுக்க நினைத்த ராகுலின் கையில், பந்து பட்டு வெளியேறியது. கைக்கு வந்த வாய்ப்பை தவற விட்டதால் சற்று விரக்தியில் காணப்பட்டார் ராகுல்.
ஆனால், இதனை வெளியே இருந்து கவனித்துக் கொண்டிருந்த லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீர், ராகுல் கேட்ச் பிடித்து விட்டதாக எண்ணி முதலில் மிகவும் உற்சாகமானார். இதன் பின்னர், அவர் தவறவிட்ட மறு நொடியே அவரின் முகம் மொத்தமாக மாறியது.
ஒரே நொடியில், சந்தோஷத்தில் இருந்து விரக்தியில் மாறிய கவுதம் கம்பீர் ரியாக்ஷன்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.