மைதானத்தை காயவைக்க 'ஹேர்ட்ரையரா?'.. கலாய்த்துத் தள்ளிய 'நெட்டிசன்கள்'... சோகத்தை மறந்து சிரித்த ரசிகர்கள்...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Suriyaraj | Jan 06, 2020 11:27 AM
இந்தியா இலங்கை கிரிக்கெட் போட்டியின்போது மழையால் ஈரமான மைதானத்தை காயவைக்க ஹேர் ட்ரையர் மற்றம் அயர்ன்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டதை நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடருக்கான முதல் போட்டி கவுகாத்தியில் நேற்று தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். திட்டமிட்டபடி, போட்டி இரவு 7.00 மணிக்கு துவங்க இருந்த நிலையில், திடீரென மழை பெய்ததால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
அப்போது மைதானத்தில் தேங்கியிருந்த தண்ணீரை அப்புறப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றன. முக்கியமாக பிச்சின் ஈரத்தன்மையைப் போக்க ஹேர் ட்ரையர், அயர்ன்பாக்ஸ் போன்றவை பயன்படுத்தப்பட்டன. இதனைக் கண்ட ரசிகர்கள் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதையும் மறந்து சிரிக்கத் தொடங்கினர். போட்டியை பார்க்க முடியவில்லையே என்ற சோகத்தில் இருந்த ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பிசிசிஐ-யை கலாய்க்கத் தொடங்கினர். 2020ல் மைதானத்தை காயவைக்க ஹேர்ட்ரையர், அயர்ன்பாக்ஸ் பயன்படுத்துவது புதிய புரட்சி என கிண்டலடித்தனர்.
பிசிசிஐ போன்ற சிறந்த கிரிக்கெட் வாரியம் ஏன்? இப்படி நகைப்பை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொள்கிறது என கங்குலியை டேக் செய்து கேள்வி எழுப்பினர். சமூக வளைதங்கள் ஹேர்ட்ரையர், அயர்ன்பாக்ஸ் போஸ்ட்களால் நிரம்பி வழிந்தன. ஹேர்ட்ரையர் புகைப்படங்களால் மீம்ஸ்களும் பறந்து வருகின்றன.
