“ஒரு மேட்ச்ல சரியா விளையாடலைன்னா அவரை உட்கார வச்சீங்க”.. பெரிய தப்பு செய்த CSK.. சுட்டிக்காட்டிய முன்னாள் வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுதொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வேவை முதலில் ப்ளேயிங் லெவனில் எடுக்காமல் சிஎஸ்கே அணி தவறு செய்துவிட்டதாக முகமது கைஃப் குற்றம் சாட்டியுள்ளார்.
Also Read | “பவுண்டரி அடிங்க, ஆனா இத மட்டும் பண்ணாதீங்க”.. கடைசி ஓவரில் தோனியிடம் விளையாட்டா பிராவோ வச்ச கோரிக்கை..!
ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர்களான டெவோன் கான்வே 87 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 41 ரன்களும், சிவம் துபே 32 ரன்களும் எடுத்தனர். இதனை அடுத்து பேட்டிங் செய்த டெல்லி அணி 17.4 ஓவர்களில் 117 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனால் 91 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் சில போட்டிகளில் டெவோன் கான்வேவை சிஎஸ்கே அணியின் ப்ளேயிங் லெவனில் எடுக்காமல் இருந்தது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமது கைப் விமர்சனம் செய்துள்ளார். இது குறித்து பேசிய அவர், ஒரே ஒரு போட்டியில் சரியாக ஆடவில்லை, உடனே டெவோன் கான்வே போன்ற ஒரு வீரரை யாராவது ட்ராப் செய்வார்களா? ஆனால் இந்த சீசனின் தொடக்கத்திலேயே சிஎஸ்கே அணி அப்படி செய்து பெரும் தவறிழைத்து விட்டது. இந்த தவறுக்காக நிச்சயம் அவர்கள் வருந்தியிருப்பார்கள். மிகச் சிறந்த வீரரை அணியில் வைத்து கொண்டு அவரை சரியாக உபயோகப்படுத்த தெரியவில்லை.
டெவோன் கான்வே கிளாஸ் ப்ளேயர், அனைத்து விதமான ஷாட்களும் அவரிடத்தில் உள்ளது. இவரும் 360 டிகிரி வீரர்தான். அவர் இந்த பந்துக்கு இப்படிதான் அடிப்பார் என்று பவுலர்களால் கணிக்க முடியாது. அதேபோல் தோனி மீண்டும் கேப்டனானது முக்கியமான மாற்றம். டாஸ் போடுவதற்கு அவர் வரும்போது வித்தியாசத்தை உணர முடிகிறது. ரசிகர்கள்தான் அவரின் பக்கபலம். மீண்டும் கேப்டன்சி தன் பக்கம் வந்தவுடன் அணி முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டார். கேப்டனாக விளையாடிய 3 போட்டிகளில் 2-ல் வெற்றியும் பெற வைத்துள்ளார்’ என முகமது கைஃப் கூறியுள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடரின் முதல் 8 போட்டிகளில் சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக ஜடேஜா செயல்பட்டார். இவர் தலைமையில் விளையாடிய சென்னை அணி 2-ல் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும் இந்த சமயத்தில்தான் டெவோன் கான்வேவுக்கு ப்ளேயிங் லெவனில் இடம் கிடைக்கவில்லை. இதனை அடுத்து மீண்டும் தோனியிடமே கேப்டன் பொறுப்பை ஜடேஜா ஒப்படைத்தார். இதனைத் தொடர்ந்து டெவோன் கான்வேவுக்கும் ப்ளேயிங் லெவனில் இடம் கிடைத்தது. சமீபத்தில் சிஎஸ்கே விளையாடிய 3 போட்டிகளில் இவர் 85*, 56, 87 ரன்கள் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8