"ஸ்கூல்ல இருந்தே எனக்கு அது செட் ஆகாது" - PLAY OFF வாய்ப்பு பற்றி தோனி என்ன சொல்லிருக்காரு பாருங்க
முகப்பு > செய்திகள் > விளையாட்டுப்ளே ஆஃப் செல்வது பற்றி சி எஸ் கே கேப்டன் தோனி பேசியுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளது.
Also Read | ‘ஓ இதுதான் காரணமா..?’ பேட்டை கடித்த தோனி.. முன்னாள் வீரர் கொடுத்த விளக்கம்..!
புதிய கேப்டன்…
15-வது ஐபிஎல் தொடர் இந்தியாவில் கடந்த மார்ச் 26-ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு ஒரு சில நாட்களுக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த தோனி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்தார். இதனை அடுத்து புதிய கேப்டனாக ரவீந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டார். இந்த சூழலில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் முதல் முறையாக சென்னை அணி, ஐபிஎல் தொடரின் முதல் 4 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு சில போட்டிகளில் வெற்றி பெற்றாலும், தொடர்ந்து வெற்றியைத் தக்கவைக்க முடியவில்லை. இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 2-ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் அதளபாதாளத்துக்கு சென்றதால் விமர்சனங்களை ஜடேஜாவின் கேப்டன்சி விமர்சனங்களை சந்தித்தது.
தோனி தலைமையில்…
இதையடுத்து, ரவீந்திர ஜடேஜா CSK கேப்டன் பதவியில் இருந்து விலக மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸை மீண்டும் தோனி தலைமையேற்று வழிநடத்தி வருகிறார். ஜடேஜா தனது ஆட்டத்தில் அதிக கவனம் செலுத்த இந்த முடிவை எடுத்துள்ளார் என்றும் சொல்லப்பட்டது. அதன் பின்னர் தோனி தலைமையில் விளையாடிய மூன்று போட்டிகளில் இரண்டில் சென்னை வென்றுள்ளது. ஆனாலும் சென்னை அணி ப்ளே ஆஃப் செல்வது கடினமான ஒன்றாகியுள்ளது. இதற்காக மற்ற அணிகளின் வெற்றி தோல்விகள் முக்கியப் பங்காற்ற உள்ளன.
இதெல்லாம் நடந்தா?...
சென்னை அணி அடுத்து வர இருக்கும் மும்பை, குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுடனான போட்டியில் நல்ல ரன்ரேட்டில் வெற்றிபெறவேண்டும். அதே நேரத்தில் கீழ்க்கண்டவாறு போட்டிகளின் முடிவும் அமையவேண்டும். மேலும் அடுத்தடுத்து பிற அணிகள் மோதும் போட்டிகளின் முடிவுகளும் சென்னைக்கு சாதகமாக அமையவேண்டும். ஆனால் அதில் ஒன்றின் முடிவு மாறினாலும் சென்னை அணியால் ப்ளே ஆஃப் செல்ல முடியாது.
நானும் கணக்கும்…
இந்நிலையில் இந்த புள்ளிவிவரங்கள் குறித்து பேசியுள்ள தோனி “நான் கணக்கில் பெரிய ஈடுபாடு கொண்டவன் இல்லை. பள்ளியில் கூட நான் அதில் சிறப்பான மதிப்பெண்கள் பெற்றதில்லை. ரன்ரேட் பற்றி நினைப்பது உதவாது. நீங்கள் ஐபிஎல்-ஐ ரசித்து விளையாட வேண்டும். மற்ற இரண்டு அணிகள் விளையாடும்போது, நீங்கள் அழுத்தம் மற்றும் அது சம்மந்தமான சிந்தனையில் இருக்க தேவையில்லை. அடுத்த ஆட்டத்தில் என்ன செய்வது என்று யோசிக்க வேண்டும். நாங்கள் பிளேஆஃப்களுக்குச் சென்றால், சிறப்பானது. ஆனால் நாங்கள் செல்லாவிட்டாலும் அதுவே உலகத்தின் முடிவாகி விடாது” எனக் கூலாக தனக்கே உரிய ஸ்டைலில் பேசியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8