முதல்ல ரோகித், அப்புறம் வில்லியம்சன்.. இப்போ ரிஷப் பந்த்.. ஐபிஎல் நிர்வாகம் அதிரடி நடவடிக்கை..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ரிஷப் பந்துக்கு ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரில் 15-வது லீக் போட்டி நேற்று மும்பை மைதானத்தில் நடைபெற்றது. இதில் ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக ப்ரீத்வி ஷா 61 ரன்களும், கேப்டன் ரிஷப் பந்த் 39 ரன்களும், சர்பராஸ் கான் 36 ரன்களும் எடுத்தனர். லக்னோ அணியை பொறுத்தவரை ரவி பிஷ்னோய் 2 விக்கெட்டுகளும், கிருஷ்ணப்பா கௌதம் 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்தான் லக்னோ அணி, 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் டி காக் 80 ரன்கள் அடித்தார். அதனால் அவருக்கு ஆட்டநாயகன் விருது கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்துக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் ஆகியோருக்கு இதேபோல் மெதுவாக பந்து வீசியதற்காக ஐபிஎல் நிர்வாகம் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
