தோனிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிஎஸ்கே.. கேக் வெட்டி கொண்டாட்டம்.. அப்படி என்ன ஸ்பெஷல் தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஒருநாள் போட்டிக்கான உலகக்கோப்பையை வென்று 11 ஆண்டுகள் ஆன நிலையில் தோனிக்கு சிஎஸ்கே அணி நிர்வாகம் கேக் வெட்டி சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடிய முதல் 2 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. ஐபிஎல் வரலாற்றில் இதுபோல் சிஎஸ்கே அணி தோல்வியை சந்தித்ததில்லை. இது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சூழலில் இன்று (03.04.2022) பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி விளையாட உள்ளது. மும்பை மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி ரசிகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இரு போட்டிகளில் தோல்வி பெற்றுள்ளதால், இப்போட்டியில் வெற்றி பெற சிஎஸ்கே அணியை முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த 2011-ம் ஆண்டு தோனி தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடருக்கான உலகக்கோப்பையை வென்று அசத்தியது. நேற்று இந்த வெற்றியின் 11-வது ஆண்டை ரசிகர்கள் கொண்டாடினர். அந்த வகையில், சிஎஸ்கே நிர்வாகமும் கேக் வெட்டி தோனிக்கு சிறிய சர்ப்ரைஸ் கொடுத்தது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
Achcha 😍 - Word of 7he day!
Super fam celebrates the World cup 💛 memories with the Man himself! #WhistlePodu #Yellove 🦁 @msdhoni @snj_group pic.twitter.com/Ye3WhMH0aO
— Chennai Super Kings (@ChennaiIPL) April 2, 2022
இந்த வருட ஐபிஎல் தொடருக்கு முன்பாகவே சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகினார். இதனை அடுத்து அந்த அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி 4 ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
