அடேங்கப்பா... 'ஐபிஎல்' வரலாற்றிலேயே 'அதிக' தொகைக்கு 'ஏலம்' போன 'வீரர்'... "இது நம்ம 'லிஸ்ட்'லயே இல்லியே"!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் இந்தாண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், இதற்கான ஏலம் தற்போது சென்னையில் வைத்து நடைபெற்று வருகிறது.

இந்த ஏலத்தில், கிளென் மேக்ஸ்வெல் 14.25 கோடிக்கு பெங்களூர் அணி வாங்கியுள்ளது. ஸ்டீவ் ஸ்மித்தை 2.20 கோடிக்கு டெல்லி அணியும், மொயீன் அலியை சென்னை அணி 7 கோடிக்கும் வாங்கியுள்ளது. தொடர்ந்து பல வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டு வரும் நிலையில், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக தொகைக்கு சென்றுள்ளார் தென்னாபிரிக்க வீரர் ஒருவர்.
ஆல் ரவுண்டரான கிறிஸ் மோரிஸ் பெயர் ஏலத்தில் அறிவிக்கப்பட்டதும், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் அவரை வாங்க போட்டி போட்டது. சுமார் 12 கோடிக்கு பிறகு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பந்தயத்திற்கு வர, ஏலம் இன்னும் பரபரப்பானது.
இறுதியில், ராஜஸ்தான் அணி, கிறிஸ் மோரிஸை 16.25 கோடி கொடுத்து வாங்கியது. 2008 முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்று வரும் நிலையில், ஐபிஎல் ஏல வரலாற்றிலேயே அதிக விலைக்கு போன வீரர் என்ற சாதனையை கிறிஸ் மோரிஸ் படைத்துள்ளார்.
F̶i̶n̶d̶ Found someone who can do both! 💪#IPLAuction2021 | #IPLAuction | #RoyalsFamily | #HallaBol | @Tipo_Morris pic.twitter.com/3bHT1HsgdB
— Rajasthan Royals (@rajasthanroyals) February 18, 2021
இதற்கு முன்பு, யுவராஜ் சிங்கை 16 கோடி கொடுத்து டெல்லி அணி கடந்த 2015 ஆம் ஆண்டு வாங்கியிருந்ததே அதிகபட்ச தொகையாகும். அந்த தொகையை கிறிஸ் மோரிஸ் தற்போது முறியடித்துள்ளார்.

மற்ற செய்திகள்
