புதிதாக உருவாகும் 'ஐபிஎல்' அணிகள்... முக்கிய மாநிலத்திற்கு 'நோ' சொன்ன 'பிசிசிஐ'??... வெளியான லேட்டஸ்ட் 'தகவல்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது.

ஏப்ரல் அல்லது மே மாதங்களில் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்தாண்டு புதிதாக இரண்டு அணிகள் இடம்பெறலாம் என்றும் தகவல் ஒன்று பரவி வருகிறது. ஐபிஎல் போட்டிக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ள நிலையில், புதிதாக அணிகள் இடம்பெறும் போது இன்னும் சுவாரஸ்யத்தை ஏற்படும் என்பதால் பிசிசிஐ இந்த முடிவை எடுத்துள்ளது.
இதுகுறித்து, விவாதிக்க வேண்டி இம்மாத இறுதியில் பிசிசிஐ ஆலோசனை ஒன்றை மேற்கொள்ளவுள்ளது. புதிய அணிகள் உருவாகும் பட்சத்தில் அந்த அணிகளுக்காக வீரர்களின் மெகா ஏலம் நடைபெறலாம் என்றும் கூறப்படுகிறது. இதனிடையே, எந்த மாநிலங்கள் அல்லது நகரத்தின் பெயரில் புதிய அணிகள் இடம்பெறும் என்று ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு இருந்து வந்தது.
முன்னதாக, ஐபிஎல் இறுதி போட்டியைக் காண மலையாள நடிகர் மோகன்லால் ஐக்கிய அரபு அமீரகம் வந்த போது, புதிய அணிகளில் ஒன்றை மோகன்லால் வாங்கவுள்ளார் என்றும் வதந்தி பரவியிருந்தது. மேலும், அணியின் உரிமையர்கள் பட்டியலில் பல சினிமா பிரபலங்கள் பெயரும் இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், அசாம் மாநிலம் சார்பில் கவுகாத்தி அணியை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்களின் பிரதிநிதியாக அசாம் இருக்கும் என்றும் அம்மாநில கிரிக்கெட் போர்டு அறிவுறுத்தியிருந்தது. ஆனால், தற்போது வெளியான தகவலின் படி, கவுகாத்தி அணியை உருவாக்க பிசிசிஐ மறுப்பு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், கவுகாத்தி அணிக்கு பிசிசிஐ மறுப்பு தெரிவித்ததற்கான காரணம் என்ன என்பதும் சரிவர தெரியவில்லை. அதே நேரம் இந்த அணியை வாங்க யாரும் முன் வரவில்லை என்றும் கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் சரியான முடிவுகள் என்ன என்பது பிசிசிஐ ஆலோசனை கூட்டத்திற்கு பின் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
