“மதுபோதையில் என்னை 15-வது மாடியில் இருந்து தூக்கி வீச பாத்தாரு”.. MI அணியில் விளையாடியபோது நடந்த ஷாக்.. பரபரப்பை கிளப்பிய சஹால்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 08, 2022 03:14 PM

ஐபிஎல் தொடரின் போது இந்திய வீரர் சஹாலை 15-வது மாடி பால்கனியில் வீரர் ஒருவர் மதுபோதையில் தூக்கி வீச முயன்றதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

Chahal recalls being hung from 15th floor balcony by drunk player

ஐபிஎல் 15-வது சீசனில் சஹால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பாக விளையாடி வருகிறார். இதுவரை விளையாடிய 3 போட்டியில் சஹால் 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார். கடந்த 2020 ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

ராயல் சேலஞ்ர்ஸ் பெங்களூரு அணிக்காக நீண்ட ஆண்டுகள் சஹால் விளையாடினார். ஆனால் ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு இவரை அந்த அணி விடுவித்தது. இதனை அடுத்து ராஜஸ்தான் அணி சஹாலை ஏலத்தில் எடுத்தது. அதேபோல் தமிழக சுழற்பந்து வீச்சாளர் அஸ்வினும் ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ளார். இவர்கள் இருவரும் உரையாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில், 2013-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடிய போது வீரர் ஒருவர் 13-வது மாடி பால்கனியில் இருந்து தூக்கி வீச முயன்றதாக அதிர்ச்சி தகவலை சஹால் தெரிவித்துள்ளார்.

Chahal recalls being hung from 15th floor balcony by drunk player

இதுகுறித்து பேசிய அவர், ‘இந்த விஷயத்தை இதுவரை யாரிடமும் சொன்னது இல்லை. இப்போது இந்த வீடியோ மூலம் உலகிற்கு தெரியட்டும். பெங்களூருவில் ஐபிஎல் லீக் போட்டிக்காக வந்திருந்தோம். போட்டி முடிந்தவுடன் ஹோட்டலில் வீரர்கள் அனைவரும் ஒன்று கூடி மது அருந்தினர். அப்போது வீரர் ஒருவர் என்னை முறைத்து பார்த்துக்கொண்டே இருந்தார். திடீரென்று அவர் என்னை தூக்கி கொண்டு 15-வது மாடி பால்கனியிலிருந்து என்னை தூக்கி வீச முயன்றார். நான் அதிர்ச்சியில் என்னை காப்பாற்றுங்கள் என்று கத்தினேன்.

அந்த வீரரின் கழுத்தை நன்காக பிடித்து கொண்டேன். அப்போது அங்கிருந்த சக வீரர்கள் என்னை அவரிடமிருந்து காப்பாற்றினர். நான் பயத்தில் மயங்கிவிட்டேன். பிறகு தண்ணீரை முகத்தில் தெளித்த பிறகு எனக்கு நினைவு திரும்பியது. அன்று நான் 15-வது மாடியிலிருந்து கீழே விழுந்திருப்பேன். இதுகுறித்து நானோ, மற்ற வீரர்களோ எந்த புகாரும் அளிக்கவில்லை. இந்த காரியத்தை செய்த வீரரின் பெயரை வெளியிட விரும்பவில்லை. அந்த சம்பவத்துக்கு பின் போட்டிக்காக வெளியே செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும் என்ற பாடத்தை கற்று கொண்டேன்’ என சஹால் தெரிவித்துள்ளார். இது தற்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MUMBAI-INDIANS #RR #IPL #CHAHAL

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chahal recalls being hung from 15th floor balcony by drunk player | Sports News.