VIDEO: இதே மாதிரி சம்பவம் எனக்கு நடந்தது.. அப்போ இவர்தான் என் பக்கத்துல பீல்டிங் நின்னாரு.. நேரம் பார்த்து கலாய்த்த வீரர்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஆஸ்திரேலியா எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜோ ரூட்டுக்கு உயிர் நாடியில் பந்து தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்துக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் ஆஸ்திரேலிய அணி தங்களது முதல் இன்னிங்சில் 473 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 230 ரன்களும் எடுத்தது.
அதேபோல் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 236 ரன்களும், இரண்டாவது இன்னிங்ஸில் 192 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 275 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி தொடரில் முன்னிலை பெற்று வருகிறது.
இந்த நிலையில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட்டுக்கு உயிர் நாடியில் பந்து தாக்கிய வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தின்போது ஜோ ரூட் 24 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். அப்போது ஆஸ்திரேலிய பவுலர் மிட்செல் ஸ்டார்க் வீசிய பந்து ஜோ ரூட்டின் உயிர் நாடியில் பலமாக அடித்தது. அதனால் மைதானத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார்.
இந்த சம்பவத்தை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் அலஸ்டர் குக் கிண்டலடித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு ஆஸ்திரேலியா எதிரான போட்டியின்போது அலஸ்டர் குக்கிற்கும் இதேபோல் உயிர் நாடியில் பந்து பலமாக அடித்து சுருண்டு விழுந்தார். அப்போது ஜோ ரூட் தான் அருகில் பீல்டிங் செய்து கொண்டிருந்தார்.
That has floored Root.
Ouch. #Ashes pic.twitter.com/JSbsdr9Z76
— cricket.com.au (@cricketcomau) December 19, 2021
"I was okay, I've had two children since..."
Sir Alastair Cook gives his immediate reaction to that Joe Root incident 👀#Ashes pic.twitter.com/li79f9RgYh
— Cricket on BT Sport (@btsportcricket) December 19, 2021
இதனைக் குறிப்பிட்டு பேசிய அலஸ்டர் குக், ‘அப்போது என்னைப் பற்றி பல கிண்டலான பேச்சுக்கள் எழுந்தது. ஆனால் நான் நன்றாகத்தான் இருக்கிறேன். அந்த சம்பவத்திற்கு பிறகுதான் எனக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தது. ஆனால் ஜோ ரூட்டுக்கு நிலைமை எப்படி இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை’ என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.