நான் மறுபடியும் வரேன்...! கொரோனா 'அவருக்கு' சரி ஆயிடுச்சாம்...! 'மீண்டும் டெல்லி அணியில் இணையும் வீரர்...' 'ஆகா இனி தாரைதப்பட்டை கிழிய போகுது...' - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Apr 23, 2021 02:31 PM

 அக்சர் படேல் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு தற்போது மீண்டும்  டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் இணைந்தார்.

Akshar Patel joins Delhi Capitals after recovering Corona

மார்ச் 28-ம் தேதி அன்று டெல்லி அணி தங்கியிருந்த மும்பை ஹோட்டலில் அக்சர் இருந்தார். அப்போது முதல் பரிசோதனையில் கொரோனா இல்லை என  நெகடிவ் ரிப்போர்ட் வந்தது, ஆனால் ஏப்ரல் 3-ம் தேதி டெஸ்ட் செய்து பார்க்கையில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என வந்தது.

Akshar Patel joins Delhi Capitals after recovering Corona

லேசான அறிகுறிகள் தான் இருந்துள்ளது, இதனால் பிசிசிஐயின் கொரோனா பிரத்யேக மருத்துவமனையில் உடனடியாக அட்மிட் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் கொரோனாவிலிருந்து மீண்டு வந்து டெல்லி அணியுடன் இணைந்ததை அந்த அணி இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டது. இதனால் டெல்லி ரசிகர்கள் படுகொண்டாட்டதில் உள்ளனர் மக்களை மீண்டும் சந்தித்ததில் பெரு மகிழ்ச்சி என்று அந்த வீடியோவில் அக்சர் கூறியுள்ளார்.

Akshar Patel joins Delhi Capitals after recovering Corona

நேற்று சதம் அடித்த தேவ்தத் படிக்கலுக்குப் பிறகு அக்சர் படேல் தான் கொரொனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டார்.  தற்போது நடக்கும் போட்டிகளில் அக்சர் படேலுக்கு பதிலாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி மும்பையின் இளம் வீரரான  இடது கை ஸ்பின்னர் ஷாம்ஸ் முலானி என்பவரை அணியில் தேர்வு செய்து வைத்திருந்தது.

Akshar Patel joins Delhi Capitals after recovering Corona

அடுத்த லீக் ஆட்டமாக வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று டெல்லி அணி சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்த நிலையில் அக்சர் படேல் வருவதால் போட்டி இன்னும் வலுவாக இருக்கும். எனவே ரசிகர்கள் பயங்கர உற்சாகத்தில் உள்ளனர்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Akshar Patel joins Delhi Capitals after recovering Corona | Sports News.