மறைந்த நடிகை சித்ராவுக்கு அந்த விருது வழங்கி கவுரவித்த BEHINDWOODS... மனதை உடைத்த தருணம்..!
முகப்பு > செய்திகள் > கதைகள்ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும் சொல்லி முடியாது. இதனை கருத்தில் கொண்டு Behindwoods நிறுவனம் வெற்றிகரமாக கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் டாப் நடிகர்களும், நடிகைகளும் நமது விழா மேடையை அலங்கரித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வருடத்திலிருந்து புதிய விருது விழாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது Behindwoods. அதாவது Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை இந்த வருடத்திலிருந்து வழங்கி அங்கீகாரம் அளிக்க இருக்கின்றோம். அந்த வகையில் இன்று(7.03.2021) நடைபெறும் பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறையை சார்ந்த மக்களுக்கு பேவரைட்டான பல பிரபலங்களும் பங்கு பெற்றுள்ளனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை சித்ரா. ஆரம்பத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றினாலும், அவரை புகழின் உச்சிக்கு அழைத்துச் சென்றது பாண்டியன் ஸ்டோர் தொடர் தான். அந்த தொடரில் வரும் குமரன், முல்லை ஜோடிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். இப்படி இருக்கும்போது சித்ரா சமீபத்தில் மரணமடைந்த செய்தி கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். சின்னத்திரை மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. இன்னமும் அவர் மக்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறார். அவர் திடீரென இறந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் பல பெண்களுக்கும் ஒரு உத்வேகமாக இருந்த சித்ராவை கவுரவிப்பதில் பெருமை கொள்கிறது Behindwoods. இந்நிலையில் 'தொலைக்காட்சி துறையில் மிகவும் கொண்டாடப்பட்ட நடிகை' என்ற விருதினை அவர் சார்பாக அவரது பெற்றோர்கள் பெற்றுக்கொண்டனர். இந்த விருதை மதிப்பிற்குரிய லஷ்மி ராமகிருஷ்ணன் வழங்கி கவுரவித்தார்.
