FUN PANDROM குழுவினருக்கு அந்த பிரிவில் விருது வழங்கிய BEHINDWOODS... செம குஷியில் ரசிகர்கள்...!

முகப்பு > செய்திகள் > கதைகள்

By Priyanka | Mar 07, 2021 06:31 PM

ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும் சொல்லி முடியாது. இதனை கருத்தில் கொண்டு Behindwoods நிறுவனம் வெற்றிகரமாக கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் டாப்  நடிகர்களும், நடிகைகளும் நமது விழா மேடையை அலங்கரித்துள்ளனர்.

Fun Pandrom team awarded with a spectacular award

இந்நிலையில் இந்த வருடத்திலிருந்து புதிய விருது விழாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது Behindwoods. அதாவது Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை இந்த வருடத்திலிருந்து வழங்கி அங்கீகாரம் அளிக்க இருக்கின்றோம். அந்த வகையில் இன்று(7.03.2021) நடைபெறும் பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறையை சார்ந்த மக்களுக்கு பேவரைட்டான பல பிரபலங்களும் பங்கு பெற்றுள்ளனர்.

வளர்ந்து வரும் இணைய சேவைகளால் பல புதிய கலைஞர்கள் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. அப்படி யூடியுப் மூலம் தனது திறமையை நிரூபித்து இன்று முன்னணி தொகுப்பாளர்களாக இருப்பவர்கள் சித்து, நிஷாந்த் மற்றும் ஷெரிப்.  Blacksheep யூடியூப் சேனலில் ஒளிபரப்பாகும் Fun Pandrom என்ற நிகழ்ச்சியை  சேர்ந்து வழங்கி வருகின்றனர். பொதுமக்களை பிராங்க் செய்யும் இவர்களது வீடியோக்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கின்றன. பிராங்க் செய்யும் போது மக்கள் சிலர் தவறாக நினைத்து அடித்த போதிலும் கூட அதை தனது ரசிகர்களுக்காக மகிழ்ச்சியுடன் ஏற்றுக் ஏற்றுக் கொள்ளும் சிறந்த கலைஞர்கள்.

இந்நிலையில் சிறந்த டிஜிட்டல் கண்டன்ட் உருவாக்கம் என்ற பிரிவில் Behindwoods Gold Icons விருதை தங்கள் பிராங்க்குகளுக்கு பெயர் போன Fun Pandrom குழுவினர் பெற்றுள்ளனர். இந்த விருதை எருமை சாணி விஜய் மற்றும் விஜய் டிவி TSK இருவரும் சேர்ந்து வழங்கி சிறப்பித்துள்ளனர். விருது பெற்ற Fun Pandrom குழுவினருக்கு Behindwoods சார்பாக வாழ்த்துக்கள்..!

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fun Pandrom team awarded with a spectacular award | Inspiring News.