அப்டி என்ன பேசிக்குறாங்க... BEHINDWOODS விழாவில் அஸ்வின் அருகில் ஷிவாங்கி... செம வைரல் போட்டோ..!
முகப்பு > செய்திகள் > கதைகள்ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும் சொல்லி முடியாது. இதனை கருத்தில் கொண்டு Behindwoods நிறுவனம் வெற்றிகரமாக கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் டாப் நடிகர்களும், நடிகைகளும் நமது விழா மேடையை அலங்கரித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வருடத்திலிருந்து புதிய விருது விழாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது Behindwoods. அதாவது Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை இந்த வருடத்திலிருந்து வழங்கி அங்கீகாரம் அளிக்க இருக்கின்றோம். அந்த வகையில் இன்று(7.03.2021) நடைபெறும் பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறையை சார்ந்த மக்களுக்கு பேவரைட்டான பல பிரபலங்களும் பங்கு பெற்றுள்ளனர்.
இந்நிலையில் குக் வித் கோமாளியின் இந்த சீசனை ஷிவாங்கி, அஸ்வினுக்காகவே பலரும் பார்க்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஸ்வினுக்காக ஷிவாங்கியும் சுனிதாவும் போட்டி போட்டுக் கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் வயிற்றை பதம் பார்க்கும் அளவிற்கு சிரிப்பை வரவழைக்கிறது. ஏற்கனவே ஷிவாங்கிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் அஸ்வின் ஷிவாங்கி செய்யும் கூடுதல் குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. Behindwoods Gold Icons விருது விழாவிற்கு வந்த அஸ்வின் மற்றும் ஷிவாங்கி இருவரும் அருகருகே அமர்ந்து விழாவை கண்டு ரசித்தனர். பலரும் எதிர்பார்த்த புகைப்படங்கள் இதோ..!

மற்ற செய்திகள்
