மிகவும் கொண்டாடப்பட்ட சீரியல் ஜோடி விருது... தட்டி சென்றது எந்த விஜய் டிவி சீரியல் பாருங்க..!
முகப்பு > செய்திகள் > கதைகள்ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும் சொல்லி முடியாது. இதனை கருத்தில் கொண்டு Behindwoods நிறுவனம் வெற்றிகரமாக கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் டாப் நடிகர்களும், நடிகைகளும் நமது விழா மேடையை அலங்கரித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வருடத்திலிருந்து புதிய விருது விழாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது Behindwoods. அதாவது Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை இந்த வருடத்திலிருந்து வழங்கி அங்கீகாரம் அளிக்க இருக்கின்றோம். அந்த வகையில் பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறையை சார்ந்த மக்களுக்கு பேவரைட்டான பல பிரபலங்களும் பங்கு பெற்றுள்ளனர்.
திரைப்படங்களை போலவே டிவி சீரியல்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் மிகவும் பிரபலம். தொடர்ந்து டிஆர்பி ரேட்டிங்கிலும் நல்ல இடம் பிடித்து வருகிறது. இந்நிலையில் பாரதி கண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். அமைதியான பெண்ணாக இருந்த கண்ணம்மா தனது கணவரின் தவறான எண்ணத்தினால் ஆக்ரோஷமான பெண்ணாக மாறி வாழ்க்கையில் எப்படி ஜெயிக்கிறார் என்பதே கதை. இப்படி மக்களின் பேவரைட் பாரதி கண்ணம்மா ஜோடியான அருண் மற்றும் ரோஷினுக்கு "தொலைக்காட்சியில் மிகவும் கொண்டாடப்பட்ட ஜோடி' என்ற விருதினை வழங்குவதில் பெருமை கொள்கிறது Behindwoods. விருதுபெற்ற அவர்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்..!

மற்ற செய்திகள்
