கண்ணீர் விட்டு கதறி அழுத புகழ்... BEHINDWOODS டிஜிட்டல் விருது விழாவில் நடந்த மனதை நொறுக்கும் சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > கதைகள்ஒரு கலைஞனுக்கு விருதுகள் தரும் மகிழ்ச்சி அளப்பரியது. மக்களை மகிழ்விக்க கலைஞர்கள் சிந்தும் வியர்வைக்கும், உழைப்புக்கும், முயற்சிக்கும் சிறந்த அங்கீகாரம் கிடைக்கும் பொழுது அதில் கிடைக்கும் பூரிப்பும் சொல்லி முடியாது. இதனை கருத்தில் கொண்டு Behindwoods நிறுவனம் வெற்றிகரமாக கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals என்ற பெயரில் சினிமா துறையை சார்ந்த பல கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்து வருகிறது. தமிழ் மற்றும் இந்திய சினிமாவின் டாப் நடிகர்களும், நடிகைகளும் நமது விழா மேடையை அலங்கரித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த வருடத்திலிருந்து புதிய விருது விழாவை அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறது Behindwoods. அதாவது Behindwoods Gold Icons என்ற பெயரில் தொலைக்காட்சி, டிஜிட்டல் மற்றும் சமூகம் சார்ந்த பல விருதுகளை இந்த வருடத்திலிருந்து வழங்கி அங்கீகாரம் அளிக்க இருக்கின்றோம். அந்த வகையில் இன்று(7.03.2021) நடைபெறும் பிரமாண்ட விருது வழங்கும் விழாவில் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் துறையை சார்ந்த மக்களுக்கு பேவரைட்டான பல பிரபலங்களும் பங்கு பெற்றுள்ளனர்.
விஜய் டிவி புகழ் பாலாஜி கடந்த செப்டம்பர் 10-ம் தேதி சென்னையில் மரணமடைந்தார் என்ற செய்தி கேட்டு அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவரது காமெடிகள் ரசிகர்களை குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்துள்ளன. அவரது இறப்பு உண்மையில் பலருக்கும் பெரிய இழப்பாகவே இருக்கிறது. கலக்கப்போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருந்தார் பாலாஜி. விஜய் டிவியின் காமெடி ஜாம்பவான் பாலாஜியின் மரணம் மொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் உலுக்கி விட்டது என்றே சொல்லவேண்டும்.
இந்நிலையில் வடிவேல் பாலாஜியை கௌரவிக்கும் விதத்தில் நமது Behindwoods நிறுவனம் அவருக்கு "தொலைக்காட்சித் துறையில் மிகவும் கொண்டாடப்பட்ட காமெடியன்" என்ற விருதினை வழங்கி அவரைப் பெருமைப்படுத்துகிறது. இந்த விருதினை கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் இயக்குனர் தாம்சன் மற்றும் தங்கதுரை வழங்க வடிவேல் பாலாஜி குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வின்போது வடிவேல் பாலாஜியின் நெருங்கிய நண்பரான புகழ் கண்ணீர் விட்டு கதறுவதைப் பார்க்க முடிந்தது.
