டூவீலருக்கு டேக்ஸ் கட்டணுமா...! 'எங்கடா நம்ம பசங்க...' டோல்கேட்டை அடித்து துவம்சம் செய்த சம்பவம்... !
முகப்பு > செய்திகள் > இந்தியாஅமேதி மாவட்டத்தில் இரு சக்கரவாகனத்திற்கு சுங்கவரி கேட்ட அதிகாரியையும், சுங்க சாவடியையும் இளைஞர்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் இளைஞர்கள் சிலர் நண்பர்களோடு இணைந்து பைக்கில் பயணம் செய்துள்ளனர். அப்போது அமேதி மாவட்ட சுங்கச்சாவடியை கடக்கும் போது சுங்கச்சாவடி அதிகாரிகள் இருசக்கர வாகனத்திற்கு சுங்கவரி கட்டிவிட்டு செல்லுமாறு கண்டித்து உள்ளனர்.
ஆத்திரமடைந்த இளைஞர்கள் சுங்கச்சாவடி அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. மேலும் வாக்குவாதம் முற்றவே இருதரப்பினருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. ஆத்திரம் அடங்காத அந்த இளைஞர்கள் கூட்டம் துணைக்கு ஆட்களை அழைத்து வந்து அதிகாரிகளை தாக்கியதோடு, சுங்கச்சாவடியையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
சுங்கச்சாவடி அதிகாரிகள் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உத்திரப்பிரதேச போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் இளைஞர்களை தேடி விசாரித்து வருகின்றனர்.
