'நான் என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன்'... யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இந்த சூழ்நிலையில் உத்தரப்பிரதேசத்தில் முதல்வர் அலுவலகத்தில் உள்ள சில அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, யோகி ஆதித்யநாத் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “எனது அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான அதிகாரிகள் என்னுடன் தொடர்பில் இருந்தனர். எனவே, நான் தனிமைப்படுத்திக் கொண்டேன்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்தச்சூழ்நிலையில் , உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் “எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
