'அவரு பண்ணா கரெக்டா இருக்கும்' ... நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட்ட 'பவன் ஜல்லாட்' ... பவன் ஜல்லாட்டுக்கு ஏன் வாய்ப்பு?
முகப்பு > செய்திகள் > இந்தியாநிர்பயா வழக்கு குற்றவாளிகளான முகேஷ் குமார் சிங், பவன் குப்தா, வினய் சர்மா, அக்ஷய் குமார் ஆகிய நான்கு பேரும் இன்று அதிகாலை சுமார் ஐந்தரை மணியளவில் தூக்கிலிடப்பட்டனர். முன்னதாக கடந்த சில மாதங்கள் குற்றவாளிகள் நான்கு பேரின் கருணை மற்றும் சீராய்வு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இந்த தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேரை தூக்கிலிடும் பணியில் ஈடுபட்டவர் உத்தரபிரதேச மாநிலம் மீரட் பகுதியை சேர்ந்த பவன் ஆகும். இந்த பணிக்காக பவனுக்கு தலா 20,000 ரூபாய் வீதம் 80,000 ரூபாய் வழங்கப்பட்டது. தற்போது, அதுவும் குறிப்பாக நிர்பயா வழக்கு குற்றவாளிகளை தூக்கிலிட பவனைத் தேர்ந்தெடுக்க காரணம் பவனின் தந்தை மற்றும் அவரது மூன்று தலைமுறையினரும் மரண தண்டனையை நிறைவேற்றும் பணியை தான் செய்து வந்தனர். அவர்களிடம் இருந்து தான் பவன் இந்த பணியை கற்றுக் கொண்டார்.
பவன் செய்யும் பணியில் சிறு பிழை கூட இருக்காது என சிறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சிறை அதிகாரிகள் தரப்பில் மேலும் கூறுகையில், 'பவன் கடினமான பொருளாதார சூழ்நிலையில் தவித்து வந்தாலும் அவரது குடும்பத்தினர் அவரது வேலையை நினைத்து பெருமிதம் கொள்கின்றனர். அதனால் தான் நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட பவன் தேர்ந்தெடுக்கப்பட்டார்' என தெரிவித்தனர்.
