"நண்பனுக்கு இப்டி ஒரு சர்ப்ரைஸா?".. வேற லெவலில் நெகிழ வெச்ச கோலி.. வைரல் ஆகும் வீடியோ!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனாக இருந்து வருபவர் விராட் கோலி. உலக அளவில், கிரிக்கெட் அரங்கில் ஏராளமான சாதனைகளையும் படைத்துள்ள விராட் கோலி, கடந்த ஆண்டு ஆசிய கோப்பைக்கு முன்பு வரை ஒரு சில ஆண்டுகள் பெரிய அளவில் ரன் குவிக்காமல் இருந்து வந்தார்.

இதன் காரணமாக கோலியை சுற்றி ஏராளமான விமர்சனங்களும் உருவாகி இருந்தது. பலரும் பல விதமான காரணங்களையும் கோலியின் ஃபார்ம் அவுட்டிற்கு தெரிவித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரிலும், அதன்பின் நடைபெற்ற டி20 உலக கோப்பை உள்ளிட்ட தொடர்களிலும் அடுத்தடுத்து ரன்களை குவித்து தானொரு ரன் மிஷின் தான் என்பதையும் நிரூபித்து, தன் மீது விமர்சனங்களுக்கு பதில் அளிக்கும் வகையிலான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
கோலியின் பேட்டிங்
இதனையடுத்து தொடர்ந்து சிறந்த ஃபார்மில் இருந்து வரும் விராட் கோலி, தற்போது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரிலும் இடம் பிடித்துள்ளார். இதுவரை மூன்று டெஸ்ட் போட்டிகள் நடந்து முடிந்துள்ளது. ஆனால் இந்த மூன்று போட்டிகளிலும் அதிக அளவில் கோலி ரன் குவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால், அதே வேளையில் அடுத்த போட்டியில் நிச்சயம் பழைய ஃபார்முக்கு திரும்பி கோலி ரன் குவிப்பார் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், புதிய போன் ஒன்றின் விளம்பரத்தில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி தோன்றும் காட்சிகள் அதிகம் வைரலாகி வருகிறது.
Vivo V 27 Pro
இது தொடர்பான காட்சிகளில், விமான நிலையத்தில் இருந்து விராட் கோலி வரும் சூழலில் அவரது கையில், Vivo V 27 Pro போன் கையில் இருக்கிறது. இதனை பார்க்கும் அங்கே இருக்கும் பயணிகளும், வெளியே இருக்கும் பத்திரிகையாளர்களும் வியப்படைய அந்த போனின் Slim டிசைன், கலர் மாறும் டிசைன் உள்ளிட்ட அம்சங்கள் அனைவரையும் வாயைப் பிளக்க வைக்கின்றது.
இதனைத் தொடர்ந்து, வெளியே காத்திருக்கும் தனது நண்பருடன் இணைந்து அவரின் ஓட்டலுக்கும் கோலி செல்கிறார். அங்கே மிகவும் அமைதியாக இருக்க, இந்த இடம் ஏன் இப்படியாகி விட்டது என்றும் கோலி கேட்கிறார். அதன் பின்னர், அங்கு உற்சாகம் களைந்து இருக்கும் ஒவ்வொருவராக விராட் கோலி ஃபோட்டோ எடுக்க, மெல்ல மெல்ல அனைவரும் உற்சாகத்தை திரும்ப பெறுகின்றனர்.
கோலி கொடுத்த சர்ப்ரைஸ்
அது மட்டுமில்லாமல், அங்கே ஆட்டம், பாட்டம் என மிகவும் அசத்தலான இடமாகவும் மாறுகிறது. இதற்கு கோலியின் நண்பரை அனைவரும் பாராட்டவும் செய்ய இதற்கு நடுவே Vivo V 27 Pro போனின் Special Features உள்ளிட்ட விஷயங்களும் இடம்பெறுகிறது. இறுதியில், கோலி மற்றும் அவரது நண்பர் இணைந்து செல்ஃபி புகைப்படங்களை எடுக்கவும் செய்கின்றனர். புதிய போன் விளம்பரத்தில் கோலி நடித்திருக்கும் வீடியோ, தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
