'வாடகை கொடு, இல்லன்னா இப்போவே காலி பண்ணு...' 'ஒரு வாய் தண்ணி குடிக்க விடல...' வருத்தப்படும் கூலி தொழிலாளி...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Apr 24, 2020 07:21 PM

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் வாடகை கொடுக்காமல் இருந்ததால் வீட்டின் மின் இணைப்பைத் துண்டித்து, குடிநீர் வழங்குவதை நிறுத்திய ஓய்வு பெற்ற முன்னாள் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

police arrested teacher who asked rent during curfew

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகேயுள்ள முட்தலைக்கோட்டா பகுதியைச் சேர்ந்தவர் மேத்யூ (48). கூலித் தொழிலாளியான இவர், அங்குள்ள தாமஸ் என்ற ஓய்வு பெற்ற ஆசிரியரின் வீட்டில் மாத வாடகையாக ரூபாய் 1,500 கொடுத்துக் கடந்த ஐந்து ஆண்டுகளாக குடியிருக்கிறார். மேத்யூவிற்கு உடல்நிலை சரியில்லாத மனைவி மற்றும் ஒரு மகனும் உள்ளார். மேத்யூவின் வீடு இரும்பு தகரங்களை வளைத்து செய்த கூடாரம் போன்றது ஆகும். அதில் வசதி என வேறு எதுவும் இல்லை.

கொரோனா வைரஸ் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் மேத்யூ வேலை இல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். எனவே அரசு வழங்கிய அரிசியை வைத்து மேத்யூவின் குடும்பம் காலம் கழித்து வந்துள்ளது. மாத இறுதியில், வீட்டின் உரிமையாளர் தாமஸ் வழக்கம் போல் வந்து வீட்டு வாடகையைக் கேட்டுள்ளார்.

அதற்கு மேத்யூ ஊரடங்கின் காரணமாக வருமானமே இல்லை. எனவே வேலைக்குச் சென்ற பின் வீட்டு வாடகையை கண்டிப்பாக செலுத்தி விடுவேன் எனக் கூறியுள்ளார். அதனை ஏற்றுக்கொள்ளாத தாமஸ் மேத்யூவை காலி செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார். மேலும் வீட்டிற்குச் செல்லும் வழிப்பாதையை அடைத்து, கரண்ட் கனெக்சனையும் துண்டித்துள்ளார். இந்தத் தகவல், அந்த பகுதியில் உள்ள தன்னார்வல அமைப்புக்கு தெரிய வர, இந்த சம்பவம் குறித்து உடனே காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து விரைந்து வந்த போலீசார் உரிமையாளர் தாமஸை கைது செய்தனர். மேலும் மேத்யூவிற்குத் தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுத்துள்ளனர்.

இது பற்றி தாமஸ் கூறுகையில் “ நான் இந்த வீட்டில் கடந்த ஐந்தாண்டுகளாக மாதம் ஆயிரத்து ஐநூறு ரூபாய் வாடகை கொடுத்து குடியிருக்கிறேன். தற்போது பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் எனக்கு வேலை இல்லை. அதனால்தான் வாடகை தர முடியவில்லை. ஆனால் அவரோ வீட்டுக்கு வருகிற வழிப்பாதையை அடைத்து விட்டார். வீட்டு உரிமையாளரின் மகன் மின் இணைப்பைத் துண்டித்தது மட்டுமல்லாமல், கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்து ஒரு வாய் குடிக்க முடியாதபடி பண்ணினார். நாங்கள் என்ன செய்வது என்றே தெரியாமல் நின்றோம்.” என்றார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகமடைய செய்துள்ளது.

Tags : #CRUELMAN