'என் பொண்டாட்டிய கொன்னுட்டேன், அர்ரெஸ்ட் பண்ணுங்க...' டிவி பார்க்க பக்கத்துக்கு வீட்டுக்கு போனதால் ஆத்திரம்...' நெஞ்சை உறைய வைக்கும் கொடூரம்... !

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 16, 2020 07:21 PM

கொரோனா ஊரடங்கு நேரத்தில் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்சனையால் மனைவியின் கழுத்தை அறுத்து போலீசாரிடம் சரணடைந்த நபரால் திருவள்ளூர் மாவட்ட மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Husband cuts his wife neck she goes neighbor house to watch TV

கொரோனா வைரஸ் பரவி வரும் அச்சத்தால் இந்தியாவில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இம்மாதிரியான சூழலில் இயற்கை தன்னுடைய இயல்பு நிலைக்கு திரும்பி வருவதாக சமூக வலைத்தளங்களில் சில புகைப்படங்கள் வலம் வருகின்றனர். ஆனால் கவலைப்படும் நிகழ்வாக குடும்ப வன்முறைகள் பெருகி வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதை நிரூபிக்கும் விதமாக திருவள்ளூரில் பக்கத்து வீட்டிற்கு டி.வி பார்க்க சென்ற மனைவியை கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார் ரமேஷ்.

கட்டிட கொத்தனாரான ரமேஷ்(44), இவரது மனைவி புஷ்பா (36) மற்றும் 3 பிள்ளைகளும் திருவள்ளூர் மாவட்டம் குருவராஜன் கண்டிகை பகுதியில் வாழ்ந்து வருகின்றனர். தற்போது 144 தடை உத்தரவால் கட்டிட வேலை ஏதும் இன்றி வீட்டிலேயே இருக்கின்றனர்.

ரமேஷ் இன்று கையில் இரத்தக் கறை உடைய கத்தியுடன் தன் மனைவியை கொலை செய்து விட்டதாக கவரப்பேட்டை காவல் நிலையத்திற்கு வந்தார். இதையடுத்து கொலை சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று போலீசார் உடலை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதை தொடர்ந்து ரமேஷை கைது செய்த போலீசார் வழக்கு பதிவில் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடந்த 10 நாட்களாக ரமேஷ் மற்றும் அவரது மனைவி புஷ்பாவிற்கு இடையே சண்டை நடந்து வருவதாக தெரியவந்துள்ளது. மேலும் புஷ்பா பொழுதுபோக்க அடிக்கடி பக்கத்து வீட்டிற்கு சென்று டிவி பார்த்து வந்துள்ளார். இது பிடிக்காத ரமேஷ் அவரை கண்டித்து வந்துள்ளார். மேலும் இதற்கு முன்பே ரமேஷ் புஷ்பாவை கத்தியால் அடித்து ஏற்பட்ட தகராறில்  புஷ்பா வெங்கல் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தான் புஷ்பாவை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்த நிலையில் இன்று இந்தக் கொலை சம்பவம் நிகழ்ந்து உள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

Tags : #CRUELMAN