ரயில் தண்டவாளத்தையே கொள்ளையடித்த கும்பலா.? அதுவும் 2 கிமீ நீளத்துக்கு.. யாரு சாமி இவங்க..!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Madhavan P | Feb 06, 2023 07:00 PM

பீஹார் மாநிலத்தில் 2 கிலோமீட்டர் நீளமுள்ள ரயில்வே இருப்புப் பாதையை மர்ம கும்பல் ஒன்று கொள்ளையடித்துச் சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சம்பவம் தற்போது இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Two km Long Railway Track Stolen in Samastipur Bihar

                        Images are subject to © copyright to their respective owners.

Also Read | மறுமணம் குறித்து ஸ்டேட்டஸ் வைத்த பெண்?.. ஆத்திரத்தில் கணவன் செஞ்ச பகீர் காரியம்.. மதுரையில் பரபரப்பு..!

பீஹார் மாநிலத்தின் சமஸ்திபூர் பகுதியில் இயங்கி வந்தது லோஹத் சர்க்கரை ஆலை. இது கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மூடப்பட்டிருக்கிறது. அருகில் உள்ள பந்தோல் ரயில் நிலையத்தில் இருந்து இந்த ஆலையினை இணைக்க ஒரு ரயில்வே பாதை போடப்பட்டு இருக்கிறது. சரக்கு போக்குவரத்திற்கு இந்த ரயில் பாதை பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. ஆலை மூடப்பட்டதால் இந்த ரயில் பாதையும் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததாக சொல்லப்படுகிறது.

இதை தொடர்ந்து இந்த இருப்புப் பாதையை பிரித்து ஏலத்திற்கு விட ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டிருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் கோரும் பணிகளும் நடைபெற்று வந்திருக்கின்றன. இந்த சூழ்நிலையில் திடீரென இந்த ரயில்வே பாதை காணாமல் போயிருக்கிறது. இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை ஊழியர்கள் இருவரை பணிநீக்கம் செய்திருக்கிறது ரயில்வே நிர்வாகம். மேலும், காவல்துறை இதுகுறித்து FIR பதிவு செய்து விசாரணையை துரிதப்படுத்தி இருக்கின்றனர். சந்தேகத்தின் அடிப்படையில் அந்த பகுதியில் பலரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Two km Long Railway Track Stolen in Samastipur Bihar

Images are subject to © copyright to their respective owners.

பீகார் மாநிலத்தில் இப்படியான வினோத திருட்டு சம்பவங்கள் நடைபெறுவது இது முதல்முறை அல்ல. முன்னதாக பங்கா மாவட்டத்தில் 2 கிமீ நீளமுள்ள சாலை மர்மமான முறையில் காணாமல் போனது.  அதேபோல, பெகுசராய் என்ற இடத்தில், டீசல் ரயிலையே மர்ம நபர்கள் திருடிச் சென்றது இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இதற்கெல்லாம் உச்சம் வைத்தாற்போல, கடந்த ஏப்ரல் மாதத்தில் அமியவர் கிராமத்தில் 45 ஆண்டுகள் பழமையான இரும்பு பாலத்தை திருட்டு கும்பல் திருடிச் சென்றது. இந்த வழக்கில் தொடர்புடைய 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். அதன் பின்னர் பாட்னா அருகில் உள்ள பிஹ்டா பகுதியில் ஓடும் ரயிலில் இருந்து சிலர் எண்ணெயை திருடிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது.

Two km Long Railway Track Stolen in Samastipur Bihar

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில், சமஸ்திபூர் பகுதியில் இருந்த ரயில் பாதை திருடப்பட்டிருப்பது இந்திய அளவில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also Read | கேம் விளையாட போனை கொடுத்த அப்பா.. ஆசையா வாங்கி மகன் செஞ்ச வேலை.. மெசேஜை பார்த்து திகைச்சு போய்ட்டாரு மனுஷன்..!

Tags : #RAILWAY TRACK #SAMASTIPUR BIHAR #STOLEN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Two km Long Railway Track Stolen in Samastipur Bihar | India News.