ட்ரெண்டிங்கில் உள்ள அபிநந்தன், சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் சேலைகள்.. வைரலாகும் புகைப்படங்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்By Siva Sankar | Mar 04, 2019 03:56 PM
குஜராத் மாநிலம் ட்ரெண்டிங்கில் இருக்கும் அனைத்து விஷயங்களையும் வியாபார உக்தியில் புகுத்தி வருவதை சமீபத்தில் பார்க்க முடிகிறது.

முன்னதாக நாடாளுமன்ற தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பேச்சும் பிரச்சாரமும் தொடங்கியபோது, மோடியின் உருவம் பதிக்கப்பட்ட புடவைகள் குஜராத்தில் ட்ரெண்டானது. அந்த புடவைகளை பாஜகவைச் சேர்ந்த மகளிரணி உறுப்பினர்கள் பாஜகவின் கட்சிக் கூட்டத்துக்கான பணிகளின்போதும், கட்சி சார்ந்த பேச்சு மற்றும் செயல்பாடுகளுக்குச் செல்லும்போது அணிவதற்காக அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த நிலையில் சமீபத்திய புல்வாமா தாக்குதல் தொடங்கி அபிநந்தன் விடுதலை வரையிலான இந்தியாவின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கினை நினைவுபடுத்தும் வகையில் புதிய ரக புடவைகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இதன் மாடல் அம்பாசிடரான பெண் ஒருவர் ராணுவ வீரர்கள் சர்ஜிக்கல் ஸ்டிரைக் நிகழ்த்துமாறு உள்ள உருவங்கள் ஏற்றப்பட்ட புடவையினை அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார். மேலும் இந்தியாவே போற்றும் துணிச்சலான ராணுவ வீரர் அபிநந்தனின் முகம் பதித்த புடவைகளும் தயாரிக்கப்பட்டுள்ளன.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதோடு, இந்த புடவைகளில் இருக்கும் ராணுவ வீரர்கள் பலர் அமெரிக்க வீரர்களாக இருப்பதால் விமர்சனங்களையும் எதிர்கொண்டு வருகிறது இந்த புடவை. இந்த புடவைகளையும் சரி இதற்கு முன்னதாக தயாரிக்கப்பட்ட மோடி புடவைகளையும்சரி, குஜராத்தின் சூரத் நகரைச் சேர்ந்த நிறுவனம்தான் அதிரடியாக தயாரித்துள்ளது. ஆனால் ராணுவ ஆபரேஷன் தீம் கொண்ட இந்த புடவைகள் 2016-ஆம் ஆண்டின் சர்ஜிக்கல் ஸ்டிரைக்கை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளன.
ராணுவ வீரர்கள், டாங்கிகள், ஹெலிகாப்டர்கள், துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதப்படை வீரர்களின் சகலமும் இடம் பெற்றுள்ள இந்த புடவைகள் தென் மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
