'காஷ்மீரினா நாங்க தாக்குவோம்'...கொடூரமாக தாக்கப்பட்ட...'காஷ்மீர் பழ வியாபாரிகள்'...வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழ்

By Jeno | Mar 07, 2019 11:39 AM

பரபரப்பான சாலையில் உலர் பழங்களை விற்பனை செய்துகொண்டிருந்த 2 காஷ்மீரிகளை வலதுசாரி அமைப்பினர் கடுமையாக தாக்கியுள்ளனர்.

Two Kashmiri dry Fruit Sellers were Attacked On Busy Lucknow Street

உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோவின் சாலையோரத்தில் இரண்டு காஷ்மீர் பழ வியாபாரிகள் அமர்ந்து உலர் பழங்களை விற்பனை செய்து கொண்டிருந்தார்கள்.அப்போது அங்கு காவி உடையில் வந்த இரண்டு பேர் 2 வியாபாரிகளையும் கடுமையாக தாக்க தொடங்கினர்.நேற்று மாலை 5 மணி அளவில் இந்த சம்பவமானது நடைபெற்றுள்ளது.

அந்த வீடியோவில் காவி உடையில் வந்து தாக்குதல் நடத்திய இருவரும் ''நாங்கள் காஷ்மீரிகள் என்பதாலே தாக்குகிறோம் என கூறுவது அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.மேலும் கட்டையை வைத்து தாக்கும் அந்த நபரிடம் தன்னை விட்டுவிடுமாறு அந்த வியாபாரி கெஞ்சுகிறார்.இருப்பினும் காவி உடை அணிந்த இருவரும்  காஷ்மீர் வியாபாரியை கொடூரமாக தாக்குகிறார்கள்.

இதனிடையே தாக்குதல் நடத்திய நபரே அந்த வீடியோவினை தனது முகநூல் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர்,தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய ஒருவரை கைது செய்துள்ளனர்.மேலும் தாக்குதலில் ஈடுபட்ட மற்றொருவர், விஷ்வ இந்து தாள் அமைப்பின் தலைவர் என்று கூறப்படுகிறது.

Tags : #JAMMUANDKASHMIR #UTTARPRADESH #LUCKNOW #KASHMIRI