புது காம்பினேஷனா இருக்கே.. இது நம்ம லிஸ்டுலயே இல்லையே.. வைரலாகும் இட்லி, சாம்பார் ஐஸ் கிரீம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாடெல்லியைச் சேர்ந்த நடைபாதை உணவு வியாபாரி ஒருவர் இட்லி, சாம்பார் ஆகியவற்றைக் கடந்து ஐஸ்கிரீம் தயாரிப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறது.
![street vendor makes ice cream rolls with idli and sambar street vendor makes ice cream rolls with idli and sambar](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/street-vendor-makes-ice-cream-rolls-with-idli-and-sambar.jpg)
Also Reaad | "இது என்னோட லாஸ்ட் ட்ரிப்".. அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் தவித்த விமான பணிப்பெண்.. வைரல் வீடியோ..!
இணையம் நம்முடைய வாழ்வில் தவிர்க்க முடியாத அங்கமாக மாறிய பின்னர் புதிய புதிய விஷயங்களை படைக்க மனிதர்கள் ஆர்வத்துடன் இயங்கி வருகின்றனர். அதிலும் குறிப்பாக புதிய உணவு வகைகளை உருவாக்குவது சமீபத்திய ட்ரெண்ட் ஆக உருவாகி வருகிறது. கொரோனா காலத்தில் லாக்டவுன் சமயத்தில் உச்சம் தொட்ட இந்த வழக்கம் இன்னும் தொடர்கிறது. அதன்படி டெல்லியை சேர்ந்த நடைபாதை உணவு வியாபாரி ஒருவர் இட்லி, சாம்பார் மற்றும் தேங்காய் சட்னி ஆகியவற்றைக் கொண்டு ஐஸ்கிரீம் தயாரித்து விற்பனை செய்து வருகிறார். இந்த வினோத காம்பினேஷனை சுவைத்துப் பார்க்க பல உணவு பிரியர்கள் இந்த கடைக்கு வருகிறார்கள்.
இட்லி ஐஸ் கிரீம்
டெல்லியின் லஜ்பத் நகர், அமர் காலனியில் அமைந்திருக்கிறது இந்த கடை . இதில் இட்லி ஐஸ் கிரீம் ஆக மாறுவதை பார்க்கவே பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். இட்லியை நன்றாக மசித்து மாவு போல மாற்றி அதன் பின்னர் அதில் சாம்பார் ஊற்றுகிறார் இந்த வினோத ருசி கொண்ட நபர். அதன் பிறகு அதில் தேங்காய் சட்னியை ஊற்றி பின்னர் வெண்ணிலா ஐஸ்கிரீம் ஸ்கூப்களை அதில் போட்டு நன்றாக கலக்குகிறார். கொஞ்ச நேரத்தில் அதனை ஐஸ்கிரீம் போல சுருட்டி மக்களுக்கு அளிக்கிறார். அவர்களுடன் இதனை ஆர்வத்துடன் வாங்கி சுவைத்துப் பார்க்கிறார்கள்.
தோசை ஐஸ் கிரீம்
கடந்த மாதம் பெங்களூரு நகரில் ஒருவர் குச்சி ஐஸ் கிரீம் போல இட்லியை தயாரித்து விற்பனை செய்ய அந்த சம்பவம் இந்தியா முழுவதும் உள்ள இட்லி பிரியர்களை திடுக்கிட வைத்தது. அதன் பின்னர் இதே டெல்லியில் மசால் தோசை மற்றும் சாம்பார் ஆகியவற்றைக் கொண்டு ஐஸ்கிரீம் ரோல் தயாரிக்கும் பணியில் இறங்கினார் உணவக உரிமையாளர் ஒருவர். அதனைத் தொடர்ந்து அந்த வரிசையில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது இந்த இட்லி சாம்பார் சட்னி ஐஸ்கிரீம்.
Also Read | பானை செய்ய கத்துக்கும் குட்டிப்பூனை.. வைரலான வேற லெவல் கியூட் வீடியோ..!
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)