ஷ்ரத்தா கொலை வழக்கு : ஜாமீன் மனு தாக்கல் செய்த பிறகு.. அஃப்தாப் எடுத்த பரபரப்பு முடிவு!!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Dec 22, 2022 07:59 PM

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் இளம்பெண் ஷ்ரத்தாவை அவரது காதலர் அஃப்தாப் கொலை செய்திருந்தது நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

Shraddha Murder case aaftab withdraws bail request sources

Also Read | "இனி ஹெலிகாப்டர் ரோட்டுலயும் ஓடும் போல".. தச்சரின் அற்புதமான கண்டுபிடிப்பு.. வியந்து பார்க்கும் மக்கள்!!

அஃப்தாப் என்ற நபருடன் லிவிங் டு கெதர் முறையில் வாழ்ந்து வந்த ஷ்ரத்தா, திடீரென காணாமல் போனது அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மத்தியில் சந்தேகத்தை வர வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

இதனைத் தொடர்ந்து, ஷ்ரத்தா குறித்து போலீசார் விசாரணை மேற்கொள்ள ஆறு மாதங்களுக்கு முன்பே அவரை அஃப்தாப் கொலை செய்ததும் தெரிய வந்துள்ளது. அது மட்டுமில்லாமல், அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து பல்வேறு பகுதிகளில் அஃப்தாப் வீசியதும் தெரிய வந்தது. நீண்ட நாட்களாக ஷ்ரத்தா யாரிடமும் பேசாமல் இருக்க, இதன் சந்தேகத்தின் பெயரில் தான் அஃப்தாப் ஆறு மாதங்களுக்கு முன்பே கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

Shraddha Murder case aaftab withdraws bail request sources

இதனைத் தொடர்ந்து, அஃப்தாப்பை கைது செய்து போலீசார் விசாரித்த நிலையில், அவர் மீதான குற்றச்சாட்டுகளையும், ஷ்ரத்தாவை கொலை செய்ததையும் ஒப்புக் கொண்டுள்ளார். இதனையடுத்து, ஷ்ரத்தாவின் உடல் பாகங்களை பல்வேறு இடங்களில் வீசி இருந்த நிலையில், அந்த இடங்களையும் அஃப்தாப் போலீசாரிடம் அடையாளம் காட்டி இருந்தார்.

இதற்கு மத்தியில், ஷ்ரத்தா கொலை வழக்குகள் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களும் வெளியாகி இருந்தது. ஷ்ரத்தாவின் உடல் வீட்டில் இருக்கும் போதே வேறு சில பெண்களை வீட்டிற்கு அஃப்தாப் கொண்டு வந்ததாகவும், ஷ்ரத்தாவின் சோஷியல் மீடியா பக்கங்களை அவர் இறந்த பிறகு பயன்படுத்தி, அவர் உயிருடன் இருப்பதாக மற்றவர்களை நம்ப வைக்கவும் அவர் முயன்றது தெரிய வந்துள்ளது.

Shraddha Murder case aaftab withdraws bail request sources

இப்படி எக்கச்சக்க அதிர்ச்சியூட்டும் தகவல்கள்  வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்த நிலையில், தற்போது மற்றொரு தகவலும் வெளியாகி உள்ளது.

முன்னதாக, டெல்லி நீதிமன்றத்தில் அஃப்தாப் சார்பில் ஜாமீன் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஆனால், ஏற்கனவே அஃப்தாப்புக்கு ஜாமீன் வழங்க டெல்லி போலீசார் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். ஷ்ரத்தா கொலை சமூகத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததால் அஃப்தாப்புக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என்றும் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

Shraddha Murder case aaftab withdraws bail request sources

இதனிடையே, தான் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை அஃப்தாப் திரும்ப பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அஃப்தாப்புடன் அவரது வழக்கறிஞர் சுமார் 50 நிமிடங்கள் கலந்துரையாடிய பிறகு இந்த தகவலை அவர் கூறி உள்ளதாக தெரிகிறது.

Also Read | "அன்னைக்கு மிஸ் தமிழ்நாடு, இப்போ மிஸ் இந்தியா போட்டியில".. தடைகள் தாண்டி தடம் பதித்த தமிழக கட்டிட தொழிலாளி மகள்!!

Tags : #SHRADDHA MURDER CASE #AAFTAB

மற்ற செய்திகள்