'ஒரே ஆள் தான், ஆனா பல முகங்கள்'... 'மொத்த பிளானையும் காலி செய்த மனைவி'... 'நான் அவனில்லை' படத்தை மிஞ்சும் சம்பவம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநான் அவனில்லை படத்தில் வரும் சம்பவங்களை நிஜமாக்கும் வகையில் நடந்துள்ளது இந்த சம்பவம்.

உத்திர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் அனுஜ் சேட்டன் கத்தேரியா. இவர் தன்னை பாபா என அடையாளம் காட்டிக் கொண்டு, கடந்த 2005ல் மெயின்புரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தனர். இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
அதன்பின் 2010ல், பரோலியை சேர்ந்த பெண் ஒருவரைத் திருமணம் செய்து கொண்டார். அவருடனும் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மீண்டும் விவாகரத்துக்கு விண்ணப்பித்தார். இதைத்தொடர்ந்து 2014ம் ஆண்டு அனுஜ் மூன்றாவதாகத் திருமணம் செய்தார். அடுத்த சில காலங்களில் 3வது மனைவியின் உறவுப் பெண் ஒருவரை அனுஜ் நான்காவதாகத் திருமணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் கடந்த 2019ல் அனுஜ் மீண்டும் ஒருவரை 5வதாக திருமணம் செய்து கொண்டார். பின்னர் 5வது மனைவியை அனுஜ் கடுமையாகத் துன்புறுத்தி வந்த நிலையில், அவர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்போது தான் அனுஜ் 5 திருமணங்கள் செய்ததே மற்ற மனைவிகளுக்குத் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அனுஜ் பாபாவைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விதவிதமான தோற்றங்களில் பெண்களை ஏமாற்றிய அனுஜ் பாபாவிடம் தீவிர விசாரணை நடைபெற்று வரும் நிலையில் மேலும் அவரின் பல லீலைகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
