ரத்தன் டாடாவிற்கு கிடைத்த எலக்ட்ரிக் கார்.. வைரலாகும் புகைப்படம்.. அப்படி என்ன ஸ்பெஷல்?
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் மிக சக்தி வாய்ந்த மனிதர்களில் ஒருவராக கருதப்படுபவர் தொழிலதிபர் ரத்தன் டாடா.

மிகப் பெரிய ஒரு ஆளாக இருந்தாலும், அனைவரிடமும் மிக இயல்பாக பழகக் கூடிய குணம் உடையவர் ரத்தன் டாடா.
இவரது டாடா நிறுவனம், நானோ என்ற கார் ஒன்றை ஏற்கனவே தயாரித்திருந்தது. அதே போல, 'Electra EV' என்னும் டாடாவின் நிறுவனம், எலெக்ட்ரிக் கார்களையும் தயாரித்து வருகிறது.
எலக்ட்ரிக் கார்கள்
இந்நிலையில், டாடா நானோ காரினை அடிப்படையாக கொண்டு, எலக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் தயாரித்துள்ளது. தொடர்ந்து, அவர்கள் தயாரித்த அந்த Custom Built நானோ வாகனங்களை ரத்தன் டாடாவிற்கே வழங்கியுள்ளனர்.
சிறந்த காராக இருக்கும்
இது தொடர்பான புகைப்படத்தினை, Electra EV நிறுவனமே பகிர்ந்துள்ளது. Tata Nano EV வாகனம், 160 கி.மீ வேகம் வரை செல்லக் கூடியது. மேலும், 10 வினாடிகளில், 0 - 60 கிலோ மீட்டர் வேகத்தை எட்டும். மேலும், இந்த டாடா நானோ கார், எலக்ட்ரிக் காராக திரும்ப வந்தால், சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத சிறந்த காராக இருக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எலக்ட்ரிக் கார் அருகே ரத்தன் டாடா மற்றும் அவரது உதவியாளர் ஷாந்தனு நிற்கும் புகைப்படங்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
