"HATS OFF ஸார்... உண்மையாவே நீங்க வேற லெவல் தான்..." 'ரத்தன் டாடா' செய்த செயல்... பாராட்டித் தள்ளும் 'நெட்டிசன்கள்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் மிகப்பெரிய தொழில் நிறுவனமான டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடா சமீபத்தில் செய்த செயல் ஒன்று அனைவரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.
![ratan tata visits his former employee who is unwell ratan tata visits his former employee who is unwell](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/ratan-tata-visits-his-former-employee-who-is-unwell.jpg)
தன்னிடம் வேலை பார்த்த, உடல்நலம் குன்றிய முன்னாள் ஊழியரின் வீட்டிற்கு நேரிலேயே விசிட் அடித்து அவரிடம் நலம் விசாரித்துள்ளார் ரத்தன் டாடா. இதற்கு வேண்டி, மும்பையில் இருந்து புனே பிரெண்ட்ஸ் சொஸைட்டியிலுள்ள அந்த ஊழியரின் வீட்டிற்கு கார் மூலம் சர்ப்ரைஸாக சென்று சந்தித்துள்ளார் ரத்தன் டாடா.
அந்த ஊழியர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உடல்நலம் குன்றியிருந்த நிலையில், இந்த சந்திப்பு குறித்து யாரிடமும் தெரிவிக்காமல் ரகசியமாகவே வைத்துள்ளார் ரத்தன் டாடா. ஊடகங்கள் யாருக்கும் இது தொடர்பாக தெரியாமல் இருந்து வந்த நிலையில், இந்த சந்திப்பின் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
மிகவும் பெரிய இடத்தில் இருந்தாலும், தன்னால் முடிந்த வரையிலான உதவிகளை மற்றவர்களுக்கு செய்து வரும் டாடாவின் இந்த மனிதநேயமிக்க செயலுக்கும் மக்கள் அனைவரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)