'பாராளுமன்றத்தில் கடும் அமளி!.. டிவி இணைப்பு துண்டிப்பு'!.. விதிகள் மீறப்பட்டதா?.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > இந்தியாமாநிலங்களவை துணைத்தலைவர், ஆளும் கட்சியும் பாராளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் மீறிவிட்டனர் எனவும் மக்கள் பார்க்காமல் இருக்க ராஜ்யசபா டிவி தொடர்பையும் துண்டித்துள்ளதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. டெரிக் ஒ பிரையன் குற்றச்சாட்டியுள்ளார்.

விவசாயிகள், எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் சர்ச்சைக்குரிய வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவியில் இன்று நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், விவசாயிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ள இந்த மசோதாவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றக்கூடாது எனவும் வாக்குச்சீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த மசோதா தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டு முழுமையான ஆய்வுக்கு பின்னரே அமல்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் சார்பில் கோரிக்கை
விடப்பட்டது.
ஆனால், எதிர்கட்சிகள் விடுத்த கோரிக்கைகள் அனைத்தையும் நிராகரித்த மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஸ் வேளாண் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.
இதனால், எதிர்கட்சிகள் மாநிலங்களவையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நாடு முழுவதும் நேரடி ஒளிபரப்பாகிக்கொண்டிருந்த ராஜ்யசபா டிவி பாதியில் நிறுத்தப்பட்டது. பின்னர் சற்று நேரம் கழித்து ஒளிபரப்பு மீண்டும் தொடங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் எம்பி டெரிக் ஒ பிரையன்,
'பாராளுமன்றத்தின் அனைத்து விதிகளையும் அவர்கள் (மத்திய அரசு, மாநிலங்களவை துணைத்தலைவர்) மீறிவிட்டனர். இது வரலாற்றில் மிகவும் மோசமாக நாள். நாட்டு மக்கள் பார்க்கக்கூடாது என்பதற்காக அவர்கள் ராஜ்யசபா டிவி தொடர்பையும் துண்டித்துள்ளனர். அவர்கள் ராஜ்யசபா டிவி-யையும் தணிக்கை செய்கின்றனர்' என்றார்.

மற்ற செய்திகள்
