ஜாம்பவானுக்கே இந்த நிலையா?... 21,000 ஆயிரம் ஊழியர்களை 'வீட்டுக்கு' அனுப்பும் பிரபல நிறுவனம்?... கதறும் ஊழியர்கள்!
முகப்பு > செய்திகள் > வணிகம்கொரோனா காரணமாக உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையாக ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வருகின்றன. இதனால் ஊழியர்கள் ஒருவித அச்சத்துடனேயே வேலை செய்யும் நிலை உருவாகி இருக்கிறது.
அந்த வகையில் அமெரிக்காவின் எண்ணெய் ஜாம்பவான் என அழைக்கப்படும் ஸ்க்லம்பெர்கர் நிறுவனம் சுமார் 21 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க இருப்பதாக கூறப்படுகிறது. 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவை வழங்கி வரும் இந்நிறுவனத்தில் சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
லாக்டவுன் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். அதற்கு ஸ்க்லம்பெர்கர் நிறுவனமும் விதிவிலக்கல்ல. அதோடு இந்நிறுவனம் 3.4 பில்லியன் டாலர் நஷ்டத்தினை சந்தித்து இருப்பதாக கூறப்படுகிறது.
வரலாற்றில் முதன்முறையாக கச்சா எண்ணெய் தேவை குறைந்து இருப்பதால் இந்த முடிவை அந்நிறுவனம் எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.