'பணம் கட்டுங்க.. அப்றம் நல்ல சர்வீஸ் வேணும்ல?'.. அதிரவைத்த நிதின் கட்காரி .. வைரல் பேச்சு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | Jul 16, 2019 06:53 PM

உங்களுக்கு நல்ல சர்வீஸ் வேண்டுமென்றால், நீங்கள் பணம் கொடுத்துதான் ஆக வேண்டும் என்று பாஜக-வின் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி பேசியுள்ளது வைரல் ஆகியுள்ளது.

Pay properly in toll, you\'ll get good service, Nitin Katkari

மத்திய அமைச்சர் நிதின் கட்காரியின் பேச்சும், சர்ச்சையும் ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரர்கள் என்று சொல்லும் அளவுக்கு அவர் எது சொன்னாலும் அதன் அர்த்தங்கள் பரபரப்பை கிளப்பி, எல்லாரையும் கவனிக்க வைப்பன. அந்த வகையில், இந்திய சுங்கச் சாவடிகளில் அதிக பணம் வசூல் செய்யப்படுவது பற்றி மக்களவையில் எழுப்பப் பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்த நிதின் கட்காரியின் பேச்சு பரபரப்பாகியுள்ளது.

அப்போது பேசிய நிதின் கட்காரி, பாஜகவின் ஆட்சியில் 40 ஆயிரம் கிலோ மீட்டருக்கு சாலைகள் அமைக்கப்பட்டதாகவும், பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம் உள்ள்ளிட்ட பல இடங்களிலும் நிலம் கையகப்படுத்துதல் 80 % குறைந்துள்ளதாகவும், இதனால் 3 கோடியே 85 ஆயிரம் ரூபாய் வரையிலான கையாடல்கள், கைமீறல்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகையால், தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் சுங்கச் சாவடிகளில் பணம் கட்டினால்தான் சிறந்த சாலை மற்றும் போக்குவரத்து சேவைகளைப் பெற முடியும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Tags : #NITIN GADKARI #TOLL