'கொரோனா ஒரு நோயே கிடையாது'... 'நம்பி கொண்டிருந்த பிட்னெஸ் மாடல்'... எந்த மனைவிக்கும் இந்த நிலைமை வர கூடாது !
முகப்பு > செய்திகள் > உலகம்உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் Dmitriy Stuzhuk. பிரபல பிட்னெஸ் மாடலான இவர் துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்று விட்டு தனது தாய் நாடான உக்ரைனுக்கு திரும்பினார். அப்போது அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சுவாசிக்க மிகவும் சிரமப்பட்ட Dmitriyக்கு ஆக்சிஜன் செலுத்தப்பட்டது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட Dmitriy உருக்கத்துடன் சில கருத்துக்களை வெளியிட்டார். அதில், ''கொரோனா தொற்று ஏற்படும் வரை அப்படி ஒரு நோயே இல்லை என சொல்லி கொண்டு இருந்தேன். அது வந்து விட்டு உடனே போகும் நோய் அல்ல. அது பயங்கரமான நோய்'' என கூறியுள்ளார். இந்த சூழ்நிலையில் 8 நாட்களுக்கு பிறகு Dmitriy மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய நிலையில் அவரது உடல்நிலை மீண்டும் மோசமடைந்தது.
Dmitriyயின் இதயத்தில் பாதிப்பு ஏற்பட்டதோடு, ஒரு முறை இதய துடிப்பை நிறுத்தி விட்டது. உடனே மருத்துவர்கள் இதயத்தை இயக்க வைக்க பலகட்ட முயற்சியில் ஈடுபட்டார்கள். ஆனால் அது எந்தவித பலனையும் கொடுக்காத நிலையில், Dmitriy இறந்து விட்டதாக அவரது மனைவி சோபியா தெரிவித்துள்ளார். இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ள நிலையில், கணவனின் இறப்பை தெரிவிக்கும் கொடுமை எனக்கு நடந்துள்ளது. இதுபோன்ற கொடுமை இனிமேல் யாருக்கும் நடக்க கூடாது என தெரிவித்துள்ளார். எனவே கொரோனாவை யாரும் அலட்சியம் என தெரிவித்துள்ளார்.