'இத டெய்லி யூஸ் பண்ணினா...' 'கொரோனாவ செயலிழக்க வச்சிடும்...' 'அதுக்கு அந்த பவர் இருக்கு...' - மருத்துவ ஆய்வு முடிவு...!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும் தனி மனிதர்களாக நாம் செய்ய வேண்டிய கடமைகளை, தினமும் ஒரு ஆராய்ச்சியின் மூலம் மருத்துவர்கள் கூறி வருகின்றனர்.

அதனைத் தொடர்ந்து தற்போது மருத்துவ வைராலஜி இதழில் வெளியிடப்பட்ட கட்டுரையில் சில வாய்வழி கிருமி நாசினிகள் மற்றும் மவுத் வாஷ்கள் மனித கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் திறனைக் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
ஆய்வின் முடிவில் மறுத்து ஆராய்ச்சி குழு குறிப்பிட்டுள்ளதாவது, பல வாய்வழி மற்றும் நாசோபார்னீஜியல் வாய்க் கொப்பளிப்பான்களை ஒரு ஆய்வக அமைப்பில் சோதித்ததாகவும், அப்போது அவை மனித கொரோனா வைரஸ்களை செயலிழக்கச் செய்யும் திறனைக் கொண்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாசி மற்றும் வாய்வழி சுத்திகரிப்பான்களில் பல மனித கொரோனா வைரஸை நடுநிலையாக்குவதற்கான வலுவான திறனைக் கொண்டுள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்
மேலும் மவுத்வாஷ்கள் மட்டுமல்லாமல் குழந்தை ஷாம்பு, பெராக்சைடு புண்-வாய் சுத்தப்படுத்திகள் போன்றவைகளையும் பரிசோதித்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதுகுறித்து கூறிய அமெரிக்காவின் பென் மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வு ஆராய்ச்சியாளர் கிரேக் மேயர்ஸ் கூறும் போது, 'இன்றைய நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பூசியை கண்டறிந்து அதன் பரவும் வீதத்தை கட்டுப்படுத்துவதற்கு காத்திருக்காமல், வைரஸ் பரவுவதைக் குறைப்பதற்கான வழிமுறைகள் தேவை. நாங்கள் தற்போது பரிசோதித்த தயாரிப்புகள் எல்லாமே மார்க்கெட்டில் கிடைக்கக்கூடியவை. எனவே நாம் அப்பொருட்களை தினசரி நடைமுறைகளில் பயன்படுத்தாலம் எனவும் குறிப்பிடுள்ளார்.

மற்ற செய்திகள்
