'சுண்ணாம்புக்கல்லுக்குள் இருந்த மர்மம்'... 'அதானி துறைமுகத்தில் சிக்கிய 3 ஆயிரம் கிலோ ஹெராயின்'... அதிரடி திருப்பம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகுஜராத் துறைமுகத்தில் 3 ஆயிரம் கிலோ ஹெராயின் போதைப் பொருள் பிடிபட்ட வழக்கில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானிலிருந்து சுண்ணாம்புக்கல் எனக்கூறி ஹெராயின் பொட்டலங்கள் கொண்ட சரக்கு பெட்டகங்கள் ஈரான் நாட்டு வழியாகக் குஜராத்தின் முந்திரா துறைமுகத்திற்கு அண்மையில் கொண்டு வரப்பட்டது. அதில் அதிகாரிகள் சோதனை செய்ததில் 2,988 கிலோ ஹெராயின் இருப்பதைக் கண்டுபிடித்தார்கள்.
இந்த சம்பவம் பெரும் புயலைக் கிளப்பியது. இந்த துறைமுகத்தைத் தொழிலதிபர் கவுதம் அதானி நிர்வகித்து வரும் நிலையில், அங்கு மிகப்பெரிய அளவில் போதைப்பொருள் சிக்கியது இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விரிவான விசாரணை நடந்த வேண்டும் எனப் பல அரசியல் கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் அதிரடி திருப்பமாக மத்திய உள்துறை அமைச்சக உத்தரவுப்படி தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.

மற்ற செய்திகள்
