திடீர்னு பதவியை ராஜினாமா செய்த முகேஷ் அம்பானி.. புதிய தலைவராக ஆகாஷ் அம்பானி தேர்வு..!

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Madhavan P | Jun 28, 2022 07:51 PM

பிரபல டெலிகாம் நிறுவனமான ஜியோவின் சேர்மேன் பதவியை முகேஷ் அம்பானி ராஜினாமா செய்திருக்கிறார். இந்நிலையில் அந்த பதவிக்கு அவரது மகன் ஆகாஷ் அம்பானி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Mukesh Ambani Resigns Akash Ambani Is New Jio Chairman

Also Read | தீராத முதுகுவலி.. கிட்னி-ல கல் வந்துருச்சோன்னு பயத்துல ஹாஸ்பிட்டலுக்கு சென்ற பெண்.. டாக்டர் சொன்னதை கேட்டு அப்படியே திகைச்சு போய்ட்டாங்க..!

இந்திய பணக்காரர்களில் ஒருவரும் தொழிலதிபருமான முகேஷ் அம்பானி கடந்த 2016 ஆம் ஆண்டு ஜியோ தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தை துவங்கினார். குறைந்த கட்டணத்தில் இணைய சேவை வழங்கியதன் பலனாக கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை ஜியோ நிறுவனம் ஈர்த்தது. தொடர்ந்து பல வர்த்தக நடவடிக்கைகளையும் ஜியோ மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் இந்த நிறுவனத்தின் சேர்மேன் பொறுப்பில் இருந்து விலகிக்கொள்வதாக அம்பானி நேற்று அறிவித்திருந்தார்.

பொறுப்பு கைமாற்றம்

கடந்த ஆண்டு முதலே முகேஷ் அம்பானி தனது வாரிசுகளுக்கு நிர்வாக பொறுப்பை வழங்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் ஆகாஷ் அம்பானி, ஈஷா அம்பானி, ஆனந்த் அம்பானி ஆகியோருக்கு தனித்தனி அலுவலகம், நிர்வாக அணி ஆகியவை அமைக்கப்பட்டன. இந்நிலையில், ரிலையன்ஸ்-ன் ஜியோ நிறுவனம் அவரது மகன் ஆகாஷ் அம்பானிக்கு வழங்கப்படலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துவந்தனர்.

புதிய சேர்மேன்

இந்நிலையில், நேற்று ஜியோ நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டம் நடைபெற்றது. அதில், முகேஷ் அம்பானி ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் சேர்மேன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மேனாகவும், நிர்வாகமற்ற இயக்குநராகவும் (Non Executive Director) ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.

Mukesh Ambani Resigns Akash Ambani Is New Jio Chairman

அதாவது, ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் உட்பட அனைத்து ஜியோ டிஜிட்டல் சேவை பிராண்டுகளையும் நிர்வகித்து வரும் முதன்மை நிறுவனமான ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட்டின் இயக்குனராக முகேஷ் அம்பானி தொடர்ந்து இருப்பார். ரிலையன்ஸ் குழுமத்தின் டெலிகாம் மற்றும் டிஜிட்டல் சேவைகளை ஒருங்கிணைக்கும் தாய் நிறுவனம்தான் இந்த ஜியோ பிளாட்ஃபார்ம்ஸ் லிமிடெட் என்பது குறிப்பிடத்தக்கது.

அதனுடன் அடுத்த 5 வருட காலத்திற்கு இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக பங்கஜ் மோகன் பவார் என்பவரும் ரமிந்தர் சிங் குஜ்ரால் மற்றும் கே.வி. சௌத்ரி ஆகியோர் கூடுதல் இயக்குநர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

Also Read | "புருஷன் சவூதி போய்ட்டாரு.. இப்போதைக்கு வரமாட்டாரு"... மனைவி போட்ட பக்கா பிளான்.. 5 வருஷம் கழிச்சு ஆசையா ஊருக்கு வந்த கணவருக்கு காத்திருந்த ஷாக்..!

Tags : #MUKESH AMBANI #AKASH AMBANI #JIO CHAIRMAN #MUKESH AMBANI RESIGNS FROM RELIANCE JIO

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mukesh Ambani Resigns Akash Ambani Is New Jio Chairman | Business News.