ரயிலின் கடைசி பெட்டியில் இருக்கும் X குறியீடுக்கு இதுதான் காரணமாம்.. ரயில்வே அமைச்சகம் கொடுத்த விளக்கம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாரயில்களின் கடைசி பெட்டியில் இடம்பெற்றிருக்கும் எக்ஸ் குறியீட்டிற்கான காரணத்தை ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
ரயில்வே போக்குவரத்து
ரயில் பயணங்களை விரும்பாதவர் என யாருமே இருக்க முடியாது தான். அதுவும் குறிப்பாக இந்தியா போன்ற மக்கள் தொகை நிறைந்த, போக்குவரத்தின் தேவை அதிகம் உள்ள நாடுகளில் ரயில் சேவை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்தியாவில் நாள்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயில்கள் மூலம் பயணித்து வருகின்றனர். இந்திய இரயில்வே உலகின் மிகப்பெரிய இரயில் நெட்வொர்க்குகளில் ஒன்றாகும். 1853 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் ரயில்வே சேவை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது.
Images are subject to © copyright to their respective owners.
குறியீடு
தொலைதூர பயணங்களுக்கு மக்களுக்கான போக்குவரத்து தேர்வு பெரும்பாலும் ரயிலாகத்தான் இருக்கிறது. குறைவான கட்டணம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றின் காரணமாக பெருவாரியான மக்கள் பயணங்களுக்கு ரயில்களையே தேர்ந்தெடுக்கின்றனர். இந்தியாவை பொறுத்தவரையில் ஒவ்வொரு ரயிலிலும் அதன் கடைசி பெட்டியில் X என எழுதப்பட்டு இருக்கும். இதனை நம்மில் பலரும் நிச்சயம் பார்த்து கடந்திருப்போம். ஆனாலும் அது என்ன என்பது பலருக்கும் தெரிந்திருக்காது.
அமைச்சகம் கொடுத்த விளக்கம்
இந்த சூழ்நிலையில், இந்திய ரயில்வே துறை அமைச்சகம் இதற்கான விளக்கத்தை அளித்திருக்கிறது. அதன்படி, குறிப்பிட்ட ரயிலில் அனைத்து பெட்டிகளும் இடம் பெற்றுள்ளன என்பதை குறிக்கும் வகையில் ரயிலின் கடைசி பெட்டியில் இந்த குறியீடு இடம்பெற்றிருப்பதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்திருக்கிறது. மேலும், அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில்," எக்ஸ் என்ற எழுத்து ரயிலின் கடைசிப் பெட்டி என்பதைக் குறிக்கிறது. ரயில் பெட்டிகள் எதுவும் விடுபடாமல் ஒரு ரயில் முழுவதுமாக கடந்துவிட்டதாக இதன்மூலம் ரயில்வே அதிகாரிகள் உறுதிப்படுத்துகிறார்கள்" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Images are subject to © copyright to their respective owners.
ரயில்வே அமைச்சகத்தின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் "தகவலுக்கு நன்றி" எனவும் "இத்தனை நாள் இதனை அறிந்துகொள்ளவில்லை" எனவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.