‘இனிமே கவனமா பாத்து சாப்பிடுங்க’!.. பர்கர் சாப்பிட்ட நபருக்கு நேர்ந்த விளைவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Arunachalam | May 21, 2019 01:59 PM

பர்கருக்குள் கண்ணாடி துண்டுகள் இருந்ததை பார்க்காமல் சாப்பிட்ட நபரின் தொண்டையில் கண்ணாடி துண்டுகள் சிக்கியதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

man swalloed the glass piece during eating the burger in pune

மகாராஷ்டிர மாநிலம் புனேவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான சஜித் பதான் என்பவர். கடந்த சனிக்கிழமையன்று தனது நண்பர்களுடன் பிரபலமான பர்கர் கடைக்கு உணவருந்த சென்றுள்ளார். அப்போது, பர்கர் சாப்பிட தொடங்கிய போது சஜித் பதானின் தொண்டைக்குள் ஏதோ சிக்கியது போன்று இருந்துள்ளது. இந்நிலையில், வலியால் துடித்த அவரது வாயிலிருந்து ரத்தம் கசிந்துள்ளது.

இந்நிலையில், இதை பார்த்து அவரது நண்பர்கள் அதிர்ந்துபோயினர். அதன்பின்னர் சஜித் சாப்பிட்ட பர்கரை ஆராய்ந்த போது அதில் சில உடைந்த கண்ணாடி துண்டுகள் இருந்துள்ளது. இதனையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சஜித் தீவிர சிகிச்சைக்குப் பின் உடல் நலம் தேறியுள்ளார்.

இதையடுத்து, சஜித் பதான் அந்த பிரபல பர்கர் கடையின் மீது அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : #PUNE #BURGER