ஐயோ!...தெரியாம செஞ்சிட்டோம்...'தாய் சிறுத்தை பழிவாங்க வருமா'?...மரண பீதியில் கிராமம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Jeno | Apr 04, 2019 03:26 PM

பாம்பைக் கொல்ல கரும்புத் தோட்டத்துக்கு வைக்கப்பட்ட தீயில் சிக்கிய,5 சிறுத்தைக் குட்டிகள் தீயில் கருகி பரிதாபமாக இறந்தன.இதனால் தாய் புலி பழிவாங்க வரலாம் என,கிராம மக்கள் அச்சத்துடன் இருக்கிறார்கள்.

5 leopard cubs die in farm waste fire to kill a snakesugarcan

மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகேயுள்ள அவ்சாரி கிராமத்தில் கரும்பு அறுவடைக்கு விவசாயிகள் வந்திருக்கிறார்கள்.அப்போது கரும்பு தோட்டத்திற்குள் பாம்பு ஊர்வதை போன்ற சத்தம் கேட்க,ஏதோ விஷ பாம்பு ஒன்று புகுந்திருக்கிறது என விவசாயிகள் அச்சமடைந்திருக்கிறார்கள்.உடனே கரும்புத் தோட்டத்தில் சத்தம் வந்த பகுதியில் தீ வைத்துள்ளனர்.

தீயும் கொழுந்து விட்டு எரிந்தது.சிறிது நேரம் கழித்து தீ அணைந்த பகுதியை சென்று பார்த்த போது தான்,விவசாயிகள் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள்.அவர்கள் பாம்பு என நினைத்து தீ வைத்த பகுதியில் சிறுத்தைக் குட்டிகள் இருந்துள்ளன.அவர்கள் வைத்த தீயில் சிக்கிய 5  குட்டிகளும் பரிதாபமாக உயிரிழந்தன.தாய் சிறுத்தை வேட்டைக்குச் சென்ற சமையத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் குறித்து அந்த வனத்துறை அதிகாரிகள்,குட்டிகளின் உடலைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'சிறுத்தைகள் கரும்புத் தோட்டத்துக்குள் குட்டிகளை ஈன்று வளர்ப்பது வழக்கமானது. குட்டிகள் நன்றாக வளர்ந்த பின்பு தாய் அவற்றைக் காட்டுக்குள் அழைத்துச் செல்லும். கடந்த மார்ச் மாதத்தில் இதே பகுதியில் கரும்புத் தோட்டத்திலிருந்து இரு குட்டிகள் உயிருடன் மீட்கப்பட்டன'' என்றனர்.

இதனிடையே குட்டிகளைக் காணாததால் தாய் சிறுத்தை நிச்சயம் தங்களை பழிவாங்க வரும் என கிராம மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.மேலும் குட்டிகளை காணாததால் தாய் சிறுத்தை மிகுந்த கோபத்தில் இருக்கும்,அதனால் அது கிராம மக்களை தாக்கலாம் என்பதால் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

Tags : #5 LEOPARD #SUGARCAN #AMBEGAON #PUNE #SNAKE