"இங்க என்னங்க பண்றீங்க??.." ரெயில் நிலையத்தில் என்ட்ரி கொடுத்த அழையா விருந்தாளி.. திடீரென உருவான பதற்றம்
முகப்பு > செய்திகள் > இந்தியாஇணையத்தில், நாளுக்கு நாள் நம்மில் பலரும் அதிக நேரத்தினை செலவிட்டு வருகின்றோம். அப்படி இணைய உலகில் நாம் வலம் வரும் போது, உலகில் நடக்கும் பல சம்பவங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடிகிறது.

Also Read | கர்ப்பமா இருக்குறப்போவே திரும்பவும் கர்ப்பம்.. அமெரிக்க பெண்ணுக்கு நடந்த அதிசயம்.. பின்னணி என்ன??
அதே போல, இணையத்தில் தினந்தோறும் நிறைய வீடியோக்கள் அல்லது வித்தியாசமான நிகழ்வுகள், அடிக்கடி இணையத்தில் ட்ரெண்ட் ஆவதையும் நாம் பார்த்திருப்போம்.
அதிலும் குறிப்பாக, விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் தான் அடிக்கடி வைரலாகும் விஷயங்களில் ஒன்று. திடீரென நாம் நினைத்து கூட பார்க்க முடியாத இடங்களில், அதிர்ச்சி என்ட்ரி கொடுத்து அனைவரையும் கலங்கடிக்கச் செய்யும் வீடியோ அல்லது புகைப்படங்களை நாம் நிறைய பார்த்திருப்போம்.
மேஜை மீது இருந்த பாம்பு
அந்த வகையில், தற்போது வெளியாகி உள்ள புகைப்படம் ஒன்று, இணையத்தில் வெளியாகி, பார்க்கும் பலரது மத்தியிலும் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், கோட்டா பகுதியில் அமைந்துள்ள ரெயில் நிலையம் ஒன்றின் பேனல் அறையில், அதிகாரி ஒருவரின் மேஜை மீது, திடீரென ராஜ நாகம் ஒன்று படம் எடுத்தபடி நின்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பதற்றத்தை ஏற்படுத்திய சம்பவம்
சுமார் ஆறு ஆடி உயரமுள்ள இந்த நாகபாம்பு அங்கே இருப்பதைக் கண்டு, அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த ரெயில் நிலையம் ஒவ்வொரு நாளும், ஆயிரக்கணக்கான மாணவர்கள், தொழிலாளர்கள் என நிரம்பி வழியும் நிலையில், பாம்பு அங்கே வந்தது சற்று பதற்றத்தை ஏற்படுத்தி இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இருப்பினும், அதிக பயணிகள் நிறைந்து பரபரப்பாக காணப்படும் கோட்டா ரெயில் நிலையத்தில், ரெயில் சேவை பாதிப்போ, அல்லது வேறு ஏதேனும் பிரச்சனைகள் என எதுவும் இந்த பாம்பின் காரணமாக ஏற்படவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இது தொடர்பான புகைப்படம், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வரும் நிலையில், நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Also Read | "கங்குலி Resign பண்றாரா??.." ஒரே ஒரு ட்வீட்டால் எழுந்த குழப்பம்.. கடைசியில் அவரே கொடுத்த விளக்கம்

மற்ற செய்திகள்
