குட்டி யானை இல்ல.. இது 'சிட்டி' யானை.. பிரபல கோயிலில் கலக்கும் ரோபோ யானை..! இவ்ளோ எடையா.?
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரள மாநிலம் என எடுத்துக் கொண்டாலே நிச்சயம் அங்குள்ள கோவில் திருவிழாக்களில் நிச்சயம் யானைக்கு பிரத்யேக இடம் உள்ளது. பல கோவில்களில் யானைகளும் நிறைய வளர்க்கப்படுகிறது. கோவில் திருவிழா தாண்டி வேறு நிகழ்ச்சிகளிலும் அங்கே யானைகள் பயன்படுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான்.
அதே போல, கேரள மாநிலத்தில் திருச்சூர் பூரத்தின் போது ஏராளமான யானைகள் ஒரே இடத்தில் அணிவகுத்து நிற்கும் ஒரு நிகழ்வும் இந்திய அளவில் பிரபலமான ஒன்றாகும்.
அதே வேளையில், கோவிலில் நிஜ யானைகள் பயன்படுத்தும் சமயத்தில் சில எதிர்பாராத அசம்பாவித சம்பவங்களும் அரங்கேறுவது உண்டு.
அப்படி ஒரு சூழலில், கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் ரோபோ யானை சேவை பயன்பாட்டுக்கு வந்துள்ளது. கேரள மாநிலம், திருச்சூர் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயம் ஒன்றில் இந்த ரோபோ யானை பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றது.
மேலும் இந்த ரோபோ யானை பார்ப்பதற்கு நிஜ யானையை போலவே இருப்பது மற்றொரு சிறப்பம்சமாகும். இது முழுக்க முழுக்க எலக்ட்ரானிக் மூலம் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இரிஞ்சாடன்பிள்ளி ராமன் என இந்த யானை அழைக்கப்படும் சூழலில் இதன் மொத்த எடை 800 கிலோ ஆகும். சுமார் 10 அடி உயரம் கொண்ட இந்த யானையின் மீது சுமார் 4 பேர் வரை அமரலாம் என்றும் தகவல்கள் கூறுகின்றது.
5 லட்சம் ரூபாய் செலவில் இந்த ரோபோ யானை உருவாக்கப்பட்ட சூழலில், இதற்குள் 5 இயந்திரங்கள் உள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது. இதன் காரணமாக தலை, கண்கள், காதுகள், வாய், வால் மற்றும் தும்பிக்கை என அனைத்தையும் இந்த ரோபோ யானை அசைக்கும் போது பார்க்க நிஜ யானை போலவே அமைந்துள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பாக நடந்த திருவிழா ஒன்றில் இந்த யானை பயன்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
Also Read | "என் காதலிக்கு எப்படி மெசேஜ் பண்ணுவ?" நண்பனைக் கொன்ற இளைஞரின் பகீர் வாக்குமூலம்.!!