அடிபொலி!!! பொங்கலுக்கு லீவு குடுத்துருக்காங்கயா நம்மட கேரள அரசு! முழு விபரம்!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழர் திருநாளான பொங்கலை கேரளாவில் வாழும் தமிழர்கள் கொண்டாடும் வகையில் கேரள அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
பொங்கல்
தமிழர் திருநாளாம் பொங்கல் திருவிழா தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது. நான்கு நாட்கள் தொடர்ச்சியாக இந்த திருவிழா கொண்டாடப்படுகிறது. வேறு எந்த பண்டிகைக்கும் இல்லாத சிறப்பு இதற்கு உண்டு. மத பாகுபாடின்றி அனைவரும் ஒன்றுகூடி கொண்டாடும் திருவிழா தான் பொங்கல்.
தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் பொங்கலை முன்னிட்டு பாகுபாடில்லாமல் அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை வழங்குகிறது. பொங்கலை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் நான்கு நாட்கள் அரசு விடுமுறை அளிக்கப்படும். வெளியூரில், வசித்து பணியாற்றும் பணியாளர்கள் அனைவரும் பொங்கலை கொண்டாட தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
வெளிமாநிலத்தில் வசிப்பவர்கள் கெரோனா போன்ற சூழலில் தமிழகம் வந்து செல்வது கடினம். வெளிமாநிலங்களில் வசிப்பவர்களுக்கு விடுமுறை கிடைப்பதும் இல்லை. பொங்கல் தினத்தை அலுவலகத்திலேயே கொண்டாடும் நிலைதான் ஏற்படும்.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகவும், தமிழர்களின் நலன் குறித்து முதல்வர் கேரள முதல்வருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். கேரளாவில் தமிழ் பேசும் மக்கள் வாழும் பகுதிகளில் நாளை (ஜன.14) பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கக் கோரி கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார்.
“கடந்த 12 ஆண்டுகளாக கேரள அரசு ஜனவரி 14 ஆம் நாளினை பொங்கல் பண்டிகைக்கான உள்ளூர் விடுமுறையாக அறிவித்து வருகிறது என்று அறிகிறேன். ஜனவரி 14ம் தேதி, புனிதமான தை தமிழ் மாதத்தின் முதல் நாளாகும்; ஆனால் இந்த 2022 ஆம் ஆண்டில் ஜனவரி 15ஆம் நாளினை இந்த 6 மாவட்டங்களில் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, தமிழ்ச் சமூகங்களிடையே, உலகம் முழுவதும் கொண்டாடப்படும் பொங்கல் உள்ளூர் விடுமுறை தினமாக ஜனவரி 14 ஆம் நாளை அறிவித்திட நடவடிக்கை மேற்கொள்ள நான் தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்'” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
கேரள அரசு
முதல்வர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று நாளை (ஜன.14) கொல்லம், இடுக்கி, பத்தம்திட்டா, வயநாடு பாலக்காடு, திருவனந்தபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிப்பதாக கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதனால் மக்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தனர். கேரள அரசி்ன் அறிவிப்பை வரவேற்று பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.