'டேய், போலீஸ் வர்றாங்கடா, ஓடுறா ஓடுறா...’ ஊரடங்கை மீறி சுற்றி திரிந்த மக்கள்... 'கேரள' போலீஸ் வெளியிட்ட காமெடி வீடியோ...

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Apr 08, 2020 06:48 PM

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் தற்போது ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் வீட்டிற்குள்ளேயே பாதுகாப்பாக இருக்க அரசு வலியுறுத்தியும், சிலர் தேவைகள் எதுவுமில்லாமல் பொது வெளிகளில் சுற்றி திறந்து வருகின்றனர். இப்படி காரணமில்லாமல் சுற்றித் திரியும் நபர்களுக்கு போலீசார் பல்வேறு நூதன தணடனைகளை வழங்கி வருகின்றனர்.

Kerala ADGP uploads a meme video caught in drone camera

இப்படி காரணமில்லாமல் சுற்றி திரிபவர்களை கட்டுப்படுத்தும் விதமாக இந்தியாவின் பல பகுதிகளிலுள்ள போலீசார் டிரோன் கேமராவை பயன்படுத்தி மக்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். இந்நிலையில், கேரள போலீசார் டிரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் போது அந்த பகுதியில் சுற்றித் திரிந்த சிலர், போலீசாரின் டிரோன் கேமராவைக் கண்டதும் முகத்தை மூடிக் கொண்டு சுவர் ஏறி குதித்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த வீடியோவை கேரள மாநிலம் ஏடிஜிபி மனோஜ் ஆப்ரகாம் தனது பேஸ்புக் பக்கத்தில் காமெடி கலந்த மீம் வீடியோவாக வெளியிட்டுள்ளார். இந்த காலத்து ட்ரெண்டிற்கு ஏற்ப மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டி கேரள போலீசார் வெளியிட்ட இந்த மீம் வீடியோவை நெட்டிசன்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.